close
Choose your channels

தம்பிக்கு ஜோடி கிடைக்க விளம்பரம் செய்த நடிகர் விஷ்ணுவிஷால்!

Friday, June 10, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் விஷ்ணு விஷால் தனது தம்பிக்கு ஜோடியாக நடிக்கும் நடிகையை தேடி வருவதாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் விளம்பரம் செய்துள்ளார்.

தமிழ் சினிமாவின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான விஷ்ணு விஷால் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது சகோதரர் ருத்ராவை சினிமாவைல் நடிக்க வைக்க விரும்பினார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது விஷ்ணு விஷாலின் சகோதரர் ருத்ரா நடிக்கும் படத்தின் கதை முடிவு செய்யப்பட்டுள்ளதாக விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்

மேலும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க நடிகையை தேடி வருவதாகவும் 23 முதல் 25 வரை வயது உள்ள இளம் பெண்கள் படக்குழுவினரை அணுகலாம் என்றும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் விளம்பரம் கொடுத்துள்ளார். மேலும் விரைவில் இந்த படத்தின் மற்ற தகவல்கள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் விஷ்ணு விஷால் நடித்த ’மோகன்தாஸ்’ என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக தயாராகி விட்டதாகவும் விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.