close
Choose your channels

பெண் இயக்குனரின் அடுத்த படத்தில் விஷ்ணு விஷால் -  அமலாபால்!

Saturday, May 14, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பெண் இயக்குனர் இயக்கி வரும் அடுத்த திரைப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் அமலாபால் ஆகிய இருவரும் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது .

தமிழில் வெளியான சில்லுக்கருப்பட்டி, ஏலே உள்பட ஒருசில திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் ஹலிதா ஷமீம் தற்போது ’மின்மினி’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். தமிழ் திரைப்பட வரலாற்றில் உண்மையாகவே ஒரு பீரியட் படத்தை எடுத்து வருகிறார் இயக்குனர் ஹலிதா.

இவர் கடந்த 6 வருடங்களுக்கு முன் குழந்தை நட்சத்திரங்களுடன் தொடங்கிய ‘மின்மினி’ திரைப்படத்தின் முதல் பாதி படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், அந்த குழந்தை நட்சத்திரங்கள் இளைஞர்களாக வளர்வதற்கு ஆறு வருடங்கள் காத்திருந்து தற்போது இரண்டாம் பாதியை இயக்கி வருகிறார்.

இந்த நிலையில் இந்த படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் அமலாபால் ஆகிய இருவரும் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும், இருவரும் இந்த கதையின் திருப்புமுனைக்கு உதவும் கேரக்டர்களில் நடித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே விஷ்ணு விஷால் மற்றும் அமலாபால் ஆகிய இருவரும் கடந்த 2018ம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் திரைப்படமான ’ராட்சஸன்’ படத்தில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.