ரிலீசுக்கு முன்பே லாபத்தை நோக்கி செல்லும் 'எஃப்.ஐ.ஆர்': ஆச்சரியமான தகவல்

  • IndiaGlitz, [Tuesday,February 08 2022]

விஷ்ணு விஷால் நடித்த ‘எஃப்.ஐ.ஆர்’ திரைப்படம் வரும் 11ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாக உள்ளது என்பது தெரிந்ததே. இந்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ரிலீஸ் செய்வதால் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலர் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ‘எஃப்.ஐ.ஆர்’ திரைப்படத்தின் இயக்குனர் மனுஆனந்த் சமீபத்தில் அளித்த பேட்டியில் ரிலீஸுக்கு முன்னரே ‘எஃப்.ஐ.ஆர்’ படம் லாபத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாக கூறியுள்ளார். பிரபல இயக்குனர் கௌதம் மேனனிடம் உதவியாளராக இருந்து ‘எஃப்.ஐ.ஆர்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி இருக்கும் மனு ஆனந்த், அந்த பேட்டியில் மேலும் கூறியபோது, ‘எனது தயாரிப்பாளர் விஷ்ணு விஷால் கொடுத்த சுதந்திரம் காரணமாகவே நான் இந்த படத்தில் முழு ஈடுபாட்டுடன் பணி செய்ய முடிந்தது என்றும் தற்போது இந்த படத்தின் திரையரங்கு ரிலீஸ் உரிமை வியாபாரம் இல்லாமல் 22 கோடி இதுவரை வியாபாரம் ஆகி உள்ளது என்றும் இது இந்த இந்த படத்தின் பட்ஜெட்டை விட அதிகம் என்பதால் ‘எஃப்.ஐ.ஆர்’ படத்தின் வியாபாரம் லாபத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்று கூறியுள்ளார்.



இன்னும் தமிழ் மற்றும் தெலுங்கு திரையரங்கு உரிமைகளில் கிடைக்கும் வசூல் மொத்தமும் லாபம் என்பதால் ’ராட்சசன்’ படத்திற்கு பிறகு விஷ்ணு விஷாலின் மிகப்பெரிய வெற்றி படமாக ‘எஃப்.ஐ.ஆர்’ திரைப்படம் இருக்கும் என கருதப்படுகிறது.

விஷ்ணுவிஷால், கவுதம் மேனன், ரெபா மோனிகா ஜான், பார்வதி, மஞ்சிமா மோகன், ரைசா வில்சன் உள்பட பலர் நடித்த இந்த படத்திற்கு அஸ்வதி இசையமைத்துள்ளார்.

More News

சிம்பு மாதிரி எல்லோருக்கும் தைரியம் வருமா? ஓப்பனாக புகழ்ந்து தள்ளிய பிரபல நடிகர்!

தமிழ், தெலுங்கு சினிமாவில் வரவேற்பு பெற்ற நடிகராக இருந்துவரும்

சொந்தமாக வடிவமைத்த புது பங்களா… அப்பா பாசத்தால் நெகிழ வைத்த “பேட்ட“ நடிகர்!

பாலிவுட்டில் வரவேற்பு பெற்ற நடிகராக இருந்துவரும் நவாசுதீன் சித்திக் பழைய பங்களா வடிவிலான வீடு ஒன்றை கட்டியுள்ளார்.

நீங்கள் வெர்ஜினா? ரசிகரின் கேள்விக்கு கூல் பதிலளித்த யாஷிகா!

நீங்கள் வெர்ஜினா? என ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு நடிகை யாஷிகா கூல் பதிலளித்த இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

லதா மங்கேஷ்கரிடம் பிசிசிஐ பட்ட கடன் பற்றி தெரியுமா? பலரும் அறியாத தகவல்!

இந்தியாவின் நைட்டிங்கேல் என ரசிகர்களால் பெருமிதத்தோடு அழைக்கப்பட்ட பாடகி லதா மங்கேஷ்கரின் இறப்பு

ப்ரியா அட்லி பதிவு செய்த படுக்கையறை புகைப்படம்: கமெண்ட்ஸை ஆஃப் செய்தது ஏனோ?

இயக்குனர் அட்லி மனைவி ப்ரியா அட்லி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படுக்கையறை புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அதில் கமெண்ட்ஸ் பதிவு செய்ய முடியாத வகையில் ஆப் செய்து வைத்திருந்தது