close
Choose your channels

விஷ்ணுவிஷாலின் 'எஃப்.ஐ.ஆர்' படத்தின் சூப்பர் அப்டேட்!

Wednesday, July 14, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரை உலகின் இளைய தலைமுறை நடிகர்களில் ஒருவர் விஷ்ணு விஷால் என்பதும் அவர் தற்போது ஒரே நேரத்தில் நான்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் விஷ்ணு விஷால் நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்று ‘எஃப்.ஐ.ஆர்’. அதிரடி ஆக்ஷன் திரைப்படமான இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ‘எஃப்.ஐ.ஆர்’ படத்தில் இடம்பெற்ற சிங்கிள் பாடல் ஒன்றின் ரிலீஸ் தேதியை விஷ்ணு விஷால் தனது சமூக வலைதளப் பக்கத்தில் சற்றுமுன் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ’பயணம்’ என்ற பாடல் ஜூலை 17ஆம் தேதி வெளியாகும் என அவர் அறிவித்துள்ளார். இந்த படத்திற்கு அஸ்வத் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
விஷ்ணு விஷால் ஜோடியாக ரெபா மோனிகா நடித்துள்ள இந்த திரைப்படத்தில் மஞ்சிமா மோகன், கௌதம் மேனன், பிக்பாஸ் ரைசா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை மனு ஆனந்த் என்பவர் இயக்கியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.