close
Choose your channels

விஷ்ணுவிஷாலின் 'காடன்' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Sunday, February 28, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவராகிய விஷ்ணு விஷால் நடித்து முடித்துள்ள ‘காடன்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

நடிகர் விஷ்ணு விஷால் தற்போது ‘காடன்’, ‘ஜெகஜாலக்கில்லாடி’ ’எஃப்ஐஆர்’ மற்றும் ’மோகன்தாஸ்’ ஆகிய நான்கு படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இந்த நான்கு படங்களும் கிட்டத்தட்ட ரிலீசுக்கு தயாராகும் நிலையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமீபத்தில் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் முடிவடைந்த ‘காடன்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மார்ச் 26 என சற்றுமுன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளில் வெளியாகும் இந்த படம் விஷ்ணு விஷால் நடித்த படங்களிலேயே மிகப்பெரிய பட்ஜெட் படம் என்பதும் இந்த படத்தை அவரே தயாரித்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த படத்தின் ரிலீஸ் தேதி மார்ச் 26 என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மார்ச் 3ஆம் தேதி இந்த படத்தின் டிரைலர் வெளியாகும் என்றும் விஷ்ணு விஷால் தனது சமூக வலைத்தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். பிரபுசாலமன் இயக்கத்தில் உருவாகிய இந்த படத்தில் விஷ்ணு விஷால், ஜோயா ஹூசைன், ராணா டகுபதி, ஷ்ரியா பில்காவர் உள்பட பலர் நடித்துள்ளனர்
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.