பொங்கல் தினத்தில் ரிலீசாகும் முன்னணி நடிகரின் படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

  • IndiaGlitz, [Wednesday,October 21 2020]

வரும் பொங்கல் தினத்தில் ரஜினியின் ’அண்ணாத்த’ அஜித்தின் ’வலிமை’ உள்பட ஒருசில திரைப்படங்கள் வெளியாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஏழு மாதங்களாக திரைப்பட படப்பிடிப்பு முடங்கியதால் அண்ணாத்த, வலிமை போன்ற படங்கள் ரிலீசுக்கு தயாராக இல்லை

இந்த நிலையில் தற்போது பொங்கல் தினத்தில் வெளியாகும் பிரபல நடிகரின் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிரபுசாலமன் இயக்கத்தில் விஷ்ணு விஷால், ரானா டகுபதி நடிப்பில் உருவாகி வந்த ’காடன்’ என்ற பிரமாண்டமான திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

விஷ்ணுவிஷால், ரானா டகுபதி, ஜோயா ஹூசைன், ஷிரியா, உன்னிகிருஷ்ணன், பராஸ் அரோரா, ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடித்த இந்த படத்தை பிரபுசாலமன் இயக்கியுள்ளார். ஷந்தனு மொய்ட்ரியா இசையில் அசோக்குமார் ஒளிப்பதிவில், புவன்ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது