close
Choose your channels

பூனைக்கு மணியை கட்ட புலியா வந்துட்டா.. விஷ்ணு விஷாலின் 'கட்டா குஸ்தி' பாடல்!

Tuesday, November 29, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஷ்ணு விஷால் நடிப்பில் உருவான ‘கட்டா குஸ்தி’ திரைப்படம் விரைவில் ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தில் இடம்பெற்ற ’சண்டை வீரச்சி’ என்ற பாடல் வெளியாகியுள்ள நிலையில் இந்த பாடலின் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் கம்போஸ் செய்த இந்த பாடலை விவேக் எழுதியுள்ளார் என்பதும் இந்த பாடலை மாரியம்மாள் என்பவர் பாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த பாடல் நிச்சயம் சூப்பர் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி, ராணா உள்பட பலரது நடிப்பில் உருவாகிய இந்த படத்தை செல்லா அய்யாவு இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே விஷ்ணு விஷால் நடித்த ’சிலுக்குவார்ப்பட்டி சிங்கம்’ என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் டிசம்பர் 2 ஆம் தேதி தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் இன்று வெளியாகியுள்ள ‘சண்டை வீரச்சி’ பாடலின் முதல் சில வரிகள் இதோ:

பூனைக்கு மணியை கட்ட புலியா வந்துட்டா
யானைக்கு கரும்பை போல ஒருத்தன் சிக்கிட்டான்
உன்னை அடக்கிவச்சாளே
பையன் அலறிபுட்டானே
பொண்ணு கலக்கிபுட்டாளே
அவன் கலங்கி புட்டானே
ஒண்டிக்கு ஒண்டி பார்க்கும் சண்டை வீரச்சி
முட்டுக்கட்ட தூக்கி கர்லா சுத்துச்சு

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.