close
Choose your channels

பிரபல இயக்குனரின் படத்தில் இணைந்த விஷ்ணுவிஷால்

Saturday, May 26, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

 

 

வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்'   படத்தின்  வெற்றிக்கு பின்னர் கோலிவுட் திரையுலகின் இளம் வெற்றி நடிகர்களின் பட்டியலில் இணைந்த நடிகர் விஷ்ணு தற்போது 'ராட்சஸன், 'ஜகஜால கில்லாடி' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் பிரபல இயக்குனர் பிரபுசாலமன் இயக்கும் ஒரு படத்தில் நாயகனாக நடிக்க விஷ்ணு ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இயக்குனர் பிரபுசாலமன் தற்போது 'ஹாத்தி மேரா சாத்தி' என்ற இந்தி படத்தை இயக்கி வருகிறார். 'கும்கி' போலவே இந்த படமும் யானை சம்பந்தப்பட்ட படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் 'பாகுபலி' புகழ் ராணா நாயகனாக நடித்து வருகிறார். இந்த நிலையில் இந்த படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்பில் நடிக்க விஷ்ணு ஒப்பந்தமாகியுள்ளார். 

'ஹாத்தி மேரா சாத்தி' என்ற பெயரில் ஏற்கனவே கடந்த 1971ஆம் ஆண்டு பாலிவுட்டில் ராஜேஷ்கண்ணா நடிப்பில் ஒரு திரைப்படம் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் தமிழில் எம்ஜிஆர், கே.ஆர்.விஜயா நடிப்பில் 'நல்ல நேரம்' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அதே பெயரில் பிரபுசாலமன் படமும் உருவாகி வருவதால் இந்த படம் அதன் ரீமேக்கா? அல்லது புதிய கதையம்சத்துடன் கூடிய படமா? என்பது படம் வெளியான பின்னர்தான் தெரியவரும்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.