close
Choose your channels

விஷ்ணு விஷாலின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

Sunday, August 20, 2017 • தமிழ் Comments

கோலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவர் விஷ்ணுவிஷால். அவரது நடிப்பில் வெளிவந்த 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' படத்தின் வெற்றி அவரை முன்னணி நடிகர்கள் பட்டியலை நோக்கி அழைத்து சென்றது.

இந்த நிலையில் விஷ்ணு தற்போது 'கதாநாயகன்', 'பொன் ஒன்று கண்டேன்', 'சிலுக்குவார்ப்பட்டி சிங்கம்', 'ராட்சஷன்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவற்றில் 'கதாநாயகன்' படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் முடிவடைந்து தற்போது ரிலீஸ் தேதியும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் வரும் செப்டம்பர் 8ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று புதிய போஸ்டர் ஒன்றின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

விஷ்ணு, கேதரின் தெரசா, சூரி, ஆனந்த்ராஜ், மொட்டை ராஜேந்திரன், சரண்யா உள்பட மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்தில் 'மக்கள் செல்வன்' விஜய்சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். சீன் ரோல்டான் இசையமைப்பில் லட்சுமண் ஒளிப்பதிவில், ஸ்ரீதரன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை முருகானந்தம் என்பவர் இயக்கியுள்ளார். இந்த படம் விஷ்ணுவின் நிறுவனமான 'விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ்' தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Get Breaking News Alerts From IndiaGlitz