close
Choose your channels

கதை மட்டுமே படத்தை வெற்றி பெற செய்யும்.. 'வாரிசு', 'துணிவு' குறித்து விஷ்ணுவிஷால்!

Friday, December 2, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஷ்ணு விஷால் நடித்த ’கட்டா குஸ்தி’ என்ற திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது என்பதும் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகிறது என்பதும் தெரிந்ததே. இந்த படத்தின் முதல் நாள் முதல் காட்சியை வெளியான உடனே சமூக வலைத்தளங்களில் பாசிட்டிவ் விமர்சனங்கள் வெளியானதை அடுத்து இந்த படம் நிச்சயம் விஷ்ணு விஷாலுக்கு ஒரு வெற்றி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இன்று மதுரை ரசிகர்கள் மத்தியில் ’கட்டா குஸ்தி’ படத்தை பார்த்தபின் செய்தியாளர்களை சந்தித்த விஷ்ணுவிஷால், ‘என்னுடைய படத்திற்கு கதை மட்டுமே மிகவும் முக்கியமானது. கதை மட்டுமே ஒரு படத்தை வெற்றி பெறச் செய்யும் என்று தான் நம்புவதாக தெரிவித்தார்.

மேலும் என்னுடைய படங்கள் ஸ்லோவாக கொஞ்சம் கொஞ்சமாகத்தான் வெற்றி அடையும். என்னுடைய படத்திற்கு தரும் விமர்சனங்களை எதுவாக இருந்தாலும் ஏற்று கொள்வேன். விமர்சனங்களால் தான் நான் இந்த அளவுக்கு வளர்ந்திருக்கின்றேன் என்று தெரிவித்தார்.

மேலும் விஜய்யின் ’வாரிசு’ மற்றும் அஜித்தின் ’துணிவு’ ஆகிய இரண்டு படங்களை பார்க்க நான் ஆவலாக உள்ளேன் என்றும் இருபெரும் நடிகருக்கும் தனிப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உள்ளது என்றும் அவர் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.