close
Choose your channels

விஷ்ணு விஷாலின் சகோதரியா இவர்? லைக்ஸ்கள் குவியும் புகைப்படம்!

Monday, May 31, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரை உலகின் இளைய தலைமுறை நடிகர்களில் ஒருவர் விஷ்ணு விஷால் என்பதும் ’வெண்ணிலா கபடி குழு’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் ’குள்ளநரி கூட்டம்’ ’நீர்ப்பறவை’ ’முண்டாசுப்பட்டி’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை கொடுத்தார் என்பதும் கடந்த 2018ம் ஆண்டு வெளியான ’ராட்சசன்’ திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை தேடி தந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் விஷ்ணு விஷால் சமீபத்தில் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டா என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் திருமணம் குறித்த புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் சற்று முன்னர் விஷ்ணு விஷால் தனது சகோதரியின் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படத்தில் அவர் தனது சகோதரிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை அவர் தெரிவித்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த பின்னர்தான் பலருக்கு விஷ்ணு விஷாலுக்கு ஒரு சகோதரி இருக்கிறார் என்பதே தெரிய வந்துள்ளது. இந்த புகைப்படத்திற்கு தற்போது லைக்ஸ்கள் குவிந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.