'ஜிவி' இயக்குனரின் அடுத்த படத்தில் பிரபல நடிகர்!

  • IndiaGlitz, [Thursday,July 11 2019]

சமீபத்தில் வெளியான ஜிவி திரைப்படம் ஊடகங்கள் மற்றும் விமர்சகர்களின் பாராட்டுக்களை பெற்று இன்னும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றது. அறிமுக இயக்குனர் கோபிநாத் இயக்கத்தில் உருவாகியிருந்த இந்த படத்தில் வெற்றி, கருணாகரன், மோனிகா உள்பட பலர் நடித்திருந்தனர்.

இந்த நிலையில் 'ஜீவி' வசூல் ரீதியாகவும், விமர்சனரீதியாகவும் வெற்றி பெற்றதை அடுத்து, இயக்குனர் கோபிநாத்துக்கு அடுத்த படம் தற்போது புக் ஆகியுள்ளது. கோபிநாத் இயக்கும் அடுத்த படத்தை தயாரிக்கவிருப்பது நடிகர் விஷ்ணு விஷால் என்பது குறிப்பிடத்தக்கது. விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கும் 'ஜீவி' படத்திற்கு கதை திரைக்கதை எழுதிய பாபுதமிழ் கதை திரைக்கதை எழுதவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த படத்திற்கான கதை, திரைக்கதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், இந்த புதிய பட அறிவிப்பினை தனது பெற்றோர்களின் திருமண நாளில் அறிவிப்பது தனக்கு பெருமையாக இருப்பதாகவும் நடிகர் விஷ்ணுவிஷால் அறிவித்துள்ளார்.