close
Choose your channels

37 வருடங்களுக்கு முன் விஷ்ணு விஷால் மனைவி எப்படி இருந்தார் தெரியுமா? வைரல் புகைப்படம்..!

Monday, May 29, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் விஷ்ணு விஷாலின் மனைவி ஜுவாலா கட்டா 37 வருடங்களுக்கு முன் தனது பெற்றோருடன் இருந்த புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஷ்ணு விஷால் கடந்த 2021 ஆம் ஆண்டு பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவை திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் சமூக வலைதளத்தில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ஜுவாலா கட்டா சற்று முன் தனது சிறுவயது புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

37 வருடங்களுக்கு முன்னர் மகாபலிபுரம் லைட் ஹவுஸ் முன் தனது பெற்றோருடன் கை குழந்தையாக இருந்தபோது எடுத்த புகைப்படத்தை பதிவு செய்துள்ள ஜுவாலா கட்டா அதே இடத்திற்கு மீண்டும் தற்போது பெற்றோருடன் சென்ற புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார்.

37 வருடங்களுக்கு முன் பெற்றோருடன் குழந்தையாக இருந்த போது எடுத்த புகைப்படம், தற்போது பெற்றோருடன் ஜுவாலா கட்டா இருக்கும் புகைப்படம் ஆகியவற்றை ஒப்பிட்டு ரசிகர்கள் கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.