close
Choose your channels

'வாத்தி கம்மிங்' பாடல் பின்னணியுடன் ஒர்க்-அவுட் செய்யும் பிரபல தமிழ் ஹீரோ

Sunday, June 21, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் சினிமாவின் இளைய தலைமுறை ஹீரோக்களில் ஒருவர் விஷ்ணு விஷால். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ’ராட்சசன்’ மற்றும் ’சிலுக்குவார்பட்டி சிங்கம்’ ஆகிய இரண்டு வெற்றிப் படங்களில் நடித்தார். கடந்த ஆண்டு இவர் நடித்த ஒரு படமும் வெளியாகவில்லை என்றாலும் தற்போது இவர் காடன்’, ‘ஜெகஜால கில்லாடி’ ’எப்.ஐ.ஆர்’ மற்றும் ’மோகன்தாஸ்’ ஆகிய நான்கு படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இந்த நான்கு படங்களும் லாக்டவுன் முடிந்தவுடன் அதி விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த ஊரடங்கில் தன்னுடைய வீட்டிலேயே ஜிம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ள நடிகர் விஷ்ணு விஷால் அதில் தினமும் ஒர்க்-அவுட் செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் கடுமையான ஒர்க்-அவுட் செய்யும் வீடியோ ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். உடல் அளவிலோ, மனதளவிலோ பிசியாக இருக்க வேண்டியது முக்கியம் என்றும், எனது வீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஜிம்மில் பிசியாக ஒர்க்-அவுட் செய்வது மகிழ்ச்சியை அளிப்பதாகவும் விஷ்ணுவிஷால் தெரிவித்துள்ளார்.

அந்த ஒர்க்-அவுட் செய்யும் வீடியோவின் பின்னணியில் தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ படத்தின் சூப்பர் ஹிட் பாடலான ‘வாத்தி கம்மிங்’ பாடல் ஒலித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. விஷ்ணு விஷால் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.