சிவகார்த்திகேயனின் அடுத்த படத்திற்கு வில்லனாகும் 'விஸ்வரூபம்' நடிகர்..! வீடியோ வைரல்..!

  • IndiaGlitz, [Tuesday,July 04 2023]

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ’மாவீரன்’ திரைப்படம் வரும் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் அவருடைய அடுத்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ளார் என்பதும் இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பதும் தெரிந்ததே. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் வில்லனாக நடிக்கும் நடிகர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. உலகநாயகன் கமல்ஹாசனின் ’விஸ்வரூபம்’ திரைப்படத்தில் வில்லனாக நடித்த நடிகர் ராகுல் போஸ் இந்த படத்தில் வில்லனாக நடிக்க உள்ளதாக தெரிகிறது. தற்போது அவர் காஷ்மீரில் உள்ள படப்பிடிப்பில் கலந்து கொண்டு இருப்பதாக கூறியுள்ள வீடியோ இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

ஏற்கனவே இந்த படத்தில் ’சர்கார்’, ’மாஸ்டர்’, ’கைதி’ உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் லல்லு நடிப்பதாக வெளியான தகவலை அடுத்து தற்போது ராகுல் போஸ் இந்த படத்தில் இணைந்துள்ளார்.

சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய் பல்லவி இப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும், அவரும் காஷ்மீர் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

'நா ரெடி தான் வரவா': விஜய் பாடலுடன் ரிலீஸ் தேதியை அறிவித்த விஷால்..!

விஜய் நடித்து வரும் 'லியோ' படத்தில் இடம்பெற்ற 'நா ரெடி தான் வரவா' என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹிட் ஆகியுள்ள நிலையில் அந்த பாடலை கொண்டு தனது அடுத்த திரைப்படத்தின் ரிலீஸ்

தலைகீழாக வொர்க்-அவுட் செய்யும் விஜய் பட ஹீரோயின்.. வேற லெவல் வீடியோ..!

விஜய் நடித்த 'பீஸ்ட்' படத்தில் நாயகியாக நடித்த நடிகை பூஜா ஹெக்டே வேற லெவலில் தலைகீழாக வொர்க்-அவுட் செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோவுக்கு

மணி கணக்காக கேம் விளையாடும் நபரா? உங்களை பாதிக்கும் 5 மோசமான விஷயங்கள்!

ஸ்மார்ட் போன்களின் வரவிற்கு பிறகு செல்போன் பயன்படுத்தும் நேரம் அதிகரித்து விட்டது என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆனால் கொரோனா பாதிப்புக்கு பிறகு இந்த செல்போனை சிறுவர்கள்

உங்க வயசுக்கு இதை செய்திருக்க வேண்டாம்.. 'மாவீரன்' மீம் போட்ட புளூசட்டை மாறனுக்கு தயாரிப்பாளர் பதிலடி..!

சிவகார்த்திகேயன் நடித்த 'மாவீரன்' திரைப்படம் வரும் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படம் குறித்த மீம் போட்ட புளூசட்டை மாறனுக்கு இந்த படத்தின் தயாரிப்பாளர் 'உங்க

அமெரிக்க படப்பிடிப்பில் நடிகர் ஷாருக்கானிற்கு விபத்தா? அறுவை சிகிச்சை செய்ததாகத் தகவல்!

பாலிவுட் சினிமாவில் நடித்து இந்தியா முழுக்கவே பிரபலமாக இருந்துவரும் நட்சத்திர நடிகர் ஷாருக்கானிற்கு மூக்கில் படுகாயம் ஏற்பட்டதை அடுத்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகத் தகவல் கூறப்படுகிறது.