close
Choose your channels

'விஸ்வாசம்' செகண்ட் சிங்கிளில் ஒரு ஆச்சரியம்

Wednesday, December 12, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்த 'விஸ்வாசம்' படத்தின் முதல் சிங்கிள் பாடலான 'அடிச்சி நொறுக்கு' பாடலால் ஏற்பட்ட இணையதள புயலே இன்னும் அடங்கவில்லை. அதற்குள் இந்த படத்தின் செகண்ட் சிங்கிள் குறித்த செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

டி.இமான் இசையில் உருவான 'வேட்டியை மடிச்சுகட்டு' என்ற பாடல்தான் செகண்ட் சிங்கிள் என்று கூறப்படுகிறது. இதில் ஒரு ஆச்சரிய தகவல் என்னவெனில் இந்த பாடலை சூப்பர் சிங்கர் பட்டம் வென்ற செந்தில் பாடியுள்ளார் என்பதுதான். எனவே இதுவொரு கிராமிய டைப் பாடலாக இருக்கும் என கருதப்படுகிறது.

மிக விரைவில் இந்த செகண்ட் சிங்கிள் பாடல் வெளிவரவுள்ளதாக படக்குழுவினர்களிடம் இருந்து தகவல் வந்துள்ளது. எனவே இன்னும் ஓரிரு நாட்களில் இன்னொரு சூறாவளியை சமூக வலைத்தளங்கள் சந்திக்க காத்திருக்கின்றன

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.