close
Choose your channels

மூன்றே ஷெட்யூல்: முடிகிறது விசுவாசம்!

Saturday, May 19, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மூன்றே ஷெட்யூல்: முடிகிறது விசுவாசம்!

தல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கி வரும் 'விசுவாசம்' படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் இருப்பதால் அடுத்தகட்ட படப்பிடிப்பு குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது

விசுவாசம் திரைப்படம் மொத்த மூன்றே ஷெட்யூலில் படமாக்க திட்டமிடப்பட்டதாகவும், இந்த படப்பிடிப்புகள் ஐதராபாத், சென்னை மற்றும் மும்பை ஆகிய மூன்று இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டது. தற்போது ஐதரபாத்தில் முதல்கட்ட படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் நிலையில் கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் மும்பையில் செட் போடும் பணிகள் நடைபெற்று வருகிறது.

ஐதராபாத்தில் நடைபெற்று வரும் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடந்ததும், சென்னையில் இரண்டாவது கட்ட படப்பிடிப்பும், மும்பையில் மூன்றாவது கட்ட படப்பிடிப்பும் நடைபெறவுள்ளதாகவும், இந்த மூன்று ஷெட்யூலில் மொத்த படப்பிடிப்பும் முடிவடைவதாகவும் கூறப்படுகிறது. எனவே இந்த படம் முதலில் திட்டமிட்டவாறு வரும் தீபாவளி அன்று திரைக்கு வர அதிக வாய்ப்பு இருப்பதாகவே கருதப்படுகிறது.

அஜித், நயன்தாரா, ரோபோசங்கர், ரமேஷ் திலக், தம்பிராமையா, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கின்றார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.