close
Choose your channels

இணையத்தில் லீக் ஆன 'விஸ்வாசம்': அதிர்ச்சியில் படக்குழு

Tuesday, September 18, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கி வரும் 'விஸ்வாசம்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் லீக் ஆகியுள்ளதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

'வீரம்' விநாயகம் ஸ்டைலில் 'விஸ்வாசம்' படத்தில் வேஷ்டி சட்டையுடன் அஜித் நடித்த சண்டைக்காட்சியின் ஸ்டில்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. தகுந்த பாதுகாப்புடன் இந்த படத்தின் ஸ்டண்ட் காட்சிகள் படமாக்கப்பட்ட போதிலும் இந்த ஸ்டில்கள் எப்படி வெளிவந்தது என்பதே படக்குழுவினர்களுக்கு புரியாத புதிராக உள்ளது.

அஜித், நயன்தாரா, தம்பிராமையா, விவேக், ரோபோசங்கர், உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்து வருகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வரும் இந்த படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.