அஜித்தின் 'விஸ்வாசம்' மும்பையில் நடக்கும் கதையா?

  • IndiaGlitz, [Friday,August 24 2018]

தல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கி வரும் 'விஸ்வாசம்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் நேற்று அதிகாலை 3.40 மணிக்கு வெளியாகி நாள் முழுவதும் சமூக வலைத்தளங்களின் டிரெண்டில் இருந்தது.

இந்த நிலையில் இந்த படத்தில் அஜித் இரண்டு வேடங்களில் நடித்து வருவது ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் இருந்து தெரியவந்துள்ளது. அதேபோல் இந்த படம் மும்பை பின்னணியில் உள்ள கதை என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

படப்பிடிப்பு தளத்தில் அஜித்துடன் ஒரு ரசிகர் எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்றின் பின்னணியில் மகாராஷ்டிரா ரெஜிஸ்ட்ரேஷன் கொண்ட ஆட்டோக்கள் வரிசையாக நிற்கின்றன. மேலும் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு மும்பையில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளதால் இந்த படத்தின் கதை மும்பை பின்னணியாக இருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது.

ஏற்கனவே 'பாட்ஷா', 'நாயகன்' முதல் 'அஞ்சான்', 'தலைவா' வரை பல தமிழ்த்திரைப்படங்கள் மும்பை பின்னணியில் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

நயன்தாராவின் 'இமைக்கா நொடிகள்: ஒரு முன்னோட்டம்

சிபிஐ அதிகாரியாக நயன்தாராவுக்கும், சைக்கோ கொலைகாரனாக அனுராக் காஷ்யப்புக்கும் இடையே நடக்கும் போராட்டங்கள் தான் இந்த படத்தின் கதை.

கேரள வெள்ள நிவாரண நிதியாக லைகா நிறுவனம் தந்த தொகை

கேரளாவில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த கனமழையால் ஏற்பட்ட சேதத்தை சரிசெய்து அம்மாநில மக்களை இயல்பு நிலைக்கு கொண்டு வர இந்தியா முழுவதிலும் இருந்து நிதிகள் குவிந்து வருகிறது.

ஜோதிகாவுக்கு தமிழக அரசு வழங்கிய பெருமை மிகுந்த பதவி

கடந்த 2000ஆம் ஆண்டுகளில் பிரபல நடிகையாக இருந்த ஜோதிகா, சூர்யாவை திருமணம் செய்த  பின்னர் சில ஆண்டுகள் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார்.

பிக்பாஸ் வீட்டின் முதல் வைல்ட்கார்ட் எண்ட்ரி ஆகும் நடிகை  

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த சில வாரங்களாக திருப்பங்கள் இன்றி சென்று கொண்டிருக்கின்றது. போட்டியாளர்கள் ஒருவருக்கு ஒருவர் சண்டையிடுவதிலேயே கவனம் செலுத்துகின்றனர்.

ஆசைப்பட்டா மட்டும் பத்தாது, அடம்பிடிக்கணும்: 'கனா' டிரைலர் விமர்சனம்

சிவகார்த்திகேயன் தயாரிக்கும் முதல் படமான 'கனா' படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் இன்று வெளியாகவுள்ளது தெரிந்ததே. அந்த வகையில் சற்றுமுன் 'கனா' படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.