close
Choose your channels

'விவேகம்', 'விஸ்வாசம்' படத்துடன் கனெக்சன் ஆகும் ரஜினியின் '2.0'

Wednesday, November 14, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த '2.0' திரைப்படம் வரும் 29ஆம் தேதி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த படத்தின் தமிழ்ப்பதிப்பின் சென்சார் நேற்று முடிவடைந்தது என்பதும், இந்த படத்திற்கு யூஏ சான்றிதழ் கிடைத்துள்ளது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் இந்த படத்தின் வியாபாரம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. தற்போது வெளிவந்துள்ள புதிய தகவலின்படி இந்த படத்தின் கேரள ரிலீஸ் உரிமையை டோமிச்சன் முலூபப்பாடு என்பவர் பெற்றுள்ளார். இந்த படத்தின் உரிமையை அவர் ரூ.14 கோடிக்கு பெற்றுள்ளதாகவும், இந்த படத்தை பெரும்பாலான திரையரங்குகளில் அவர் ரிலீஸ் செய்வார் என்றும் கூறப்படுகிறது.

மேலும் இவர்தான் அஜித் நடித்த 'விவேகம்' படத்தை கேரளாவில் ரிலீஸ் செய்தவர் என்பதும் 'விஸ்வாசம்' படத்தை வரும் பொங்கல் தினத்தில் ரிலீஸ் செய்யவிருப்பவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.