பி.வாசு இயக்கும் அடுத்த படத்தில் அஜித்-விஜய் நாயகி

  • IndiaGlitz, [Wednesday,July 12 2017]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பணக்காரன்', 'மன்னன்', சந்திரமுகி', உள்பட பல வெற்றி படங்களை இயக்கியவர் பி.வாசு. சமீபத்தில் இவர் இயக்கிய 'சிவலிங்கா' திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் பி.வாசுவின் அடுத்த படம் நாயகிக்கு முக்கியத்தும் தரும் படமாக இருக்கும் என்றும் இந்த படத்தின் முக்கிய வேடத்தில் காஜல் அகர்வால் நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

அஜித்துடன் 'விவேகம்', விஜய்யுடன் 'மெர்சல்' ஆகிய படங்களில் நடித்து வரும் காஜல் அகர்வால், முதல்முறையாக நயன்தாரா, த்ரிஷா பாணியில் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகவுள்ள இந்த த்ரில்லர் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

ஆணவ கொலைக்கு பலியான சங்கரின் மனைவி கவுசல்யாவின் 2வது திருமண நாள் கவிதை

21ஆம் நூற்றாண்டின் டெக்னாலஜி காலத்திலும் இன்னும் சாதி மோதல்கள், ஆணவக்கொலை, கெளரவக்கொலை ஆகியவை ஆங்காங்கே நடந்து வருவது மனித குலத்திற்கே ஒரு இழுக்காக கருதப்படுகிறது...

கமல்-ரஜினி நாயகியுடன் நடிக்கும் பார்த்திபன்

உலக நாயகன் கமல்ஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்பட பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்த  80களின் கனவு நாயகி ஜெயப்ரதா மீண்டும் நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஒரு தமிழ் படத்தில் நடிக்கின்றார்...

உதயநிதி-பிரியதர்ஷன் படத்தின் இசையமைப்பாளர் இவர்தான்

தேசிய விருது பெற்ற பிரபல இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கவுள்ள படம் ஒன்றின் பூஜை சமீபத்தில் சென்னையில் நடந்தது என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் 19ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது...

குடும்பக்கட்டுப்பாடு செய்தால் 4G ஸ்மார்ட்போன்: அரசின் அதிரடி அறிவிப்பு

இந்தியாவில் நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்து கொண்டே போகிறது. இப்படியே போனால் இன்னும் ஒருசில ஆண்டுகளில் சீனாவை பின்னுக்கு தள்ளிவிட்டு மக்கள் தொகையில் இந்தியா முதலிடம் வந்துவிடும்போல் தெரிகிறது...

பயிற்சியாளர் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை: பிசிசிஐ அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து அனில் கும்ப்ளே விலகியவுடன் அடுத்த பயிற்சியாளரை தேர்வு செய்ய நேற்று சச்சின் தெண்டுல்கர், சவுரவ் கங்குலி மற்றும் விவிஎஸ் லட்சுமணன் ஆகியோர் கொண்ட குழு நேர்காணல் நடத்தியது.