close
Choose your channels

'விவேகம்' ரிலீஸ் தேதியை உறுதி செய்த அக்சராஹாசன்

Sunday, July 30, 2017 • தமிழ் Comments

தல அஜித் நடித்த 'விவேகம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் நிறைவு பெற்ற நிலையில் இந்த படம் நாளை சென்சார் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸ் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருப்பதாகவும், அதற்கு முதல் நாள் நள்ளிரவு மற்றும் அன்றைய தின அதிகாலை ரசிகர்களுக்கான காட்சிகள் டிக்கெட்டுக்களும் பிரிண்ட் ஆகி தயாராக இருப்பதாகவும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

இருப்பினும் சென்சார் சான்றிதழ் கிடைத்தவுடன் இந்த படத்தின் அதிகார்பூர்வ ரிலிஸ் தேதி படக்குழுவினர்களால் அறிவிக்கப்படவுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் நாயகிகளில் ஒருவரும், உலக நாயகன் கமல்ஹாசனின் இளையமகளுமான அக்சராஹாசன், தனது சமூக வலைத்தளத்தில் ;விவேகம்' திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது என்பதை உறுதி செய்துள்ளார். மேலும் அவர், 'ரசிகர்களான நீங்கள் எந்த அளவுக்கு இந்த படத்தை காண உற்சாகமாக இருக்கின்றீர்களோ அதே அளவு உற்சாகத்துடன் நானும் இருக்கின்றேன்' என்று கூறியுள்ளார்.

அக்சராஹாசனின் இந்த டுவீட்டுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது. ஒருசில மணி நேரத்தில் 5000க்கும் மேற்பட்ட லைக்குகள் கிடைத்துள்ளது. அக்சராஹசனின் முதல் தமிழ்ப்படமான 'விவேகம்' படம் வெளிவந்தவுடன் அவருக்கு மேலும் தமிழில் வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz