கமல்ஹாசனுடன் முதல்முறையாக இணையும் பிரபல காமெடி நடிகர்

  • IndiaGlitz, [Tuesday,August 20 2019]

உலக நாயகன் கமல்ஹாசனும், பிரபல காமெடி நடிகர் விவேக்கும் கே.பாலசந்தர் பள்ளியில் இருந்து வந்திருந்தாலும் இதுவரை இணைந்து நடிக்காத நிலையில் தற்போது 'இந்தியன் 2' படத்தில் முதல்முறையாக இணைந்து நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

'இந்தியன் 2' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில் இந்த படத்தில் இயக்குனர் சமுத்திரக்கனி ஒரு முக்கிய வேடத்தில் இணைந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி நடிகர் விவேக் ஒரு முக்கிய வேடத்தில் இந்த படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஷங்கர் இயக்கிய 'பாய்ஸ்', 'அந்நியன்' மற்றும் 'சிவாஜி' ஆகிய படங்களில் விவேக் நடித்திருந்த போதிலும் கமல்ஹாசனுடன் முதல்முறையாக விவேக் இணைகிறார். கே.பாலசந்தர் இயக்கிய 'பார்த்தாலே பரவசம்' படத்தில் கமல், விவேக் இருவரும் நடித்திருந்தாலும் இருவரும் இணைந்த காட்சிகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பில் தற்போது ரகுல் ப்ரித்திசிங், ப்ரியா பவானிசங்கர் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்து வரும் நிலையில் விரைவில் கமல்ஹாசனும் படப்பிடிப்பில் இணைந்து கொள்வார் என தெரிகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி ஐம்பது நாட்களை கடந்துவிட்ட நிலையில் இன்னும் ஒன்றரை மாதத்தில் கமல்ஹாசன் முழுநேர படப்பிடிப்பில் 'இந்தியன் 2' மற்றும் 'தலைவன் இருக்கின்றான்' ஆகிய இரண்டு படங்களின் படப்பிடிப்புகளில் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது.

More News

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் அபிராமி வெளியிட்ட வீடியோ!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான அபிராமி நேற்று வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

'நம்ம வீட்டு பிள்ளை' படத்தின் அசத்தலான அப்டேட்

சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் 'நம்ம வீட்டு பிள்ளை' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்,

'96' த்ரிஷாவுக்கு நெருக்கமாகும் அனுபமா பரமேஸ்வரன்

விஜய்சேதுபதியுடன் த்ரிஷா நடித்த '96' படம் என்றாலே அனைவருக்கும் உடனே ஞாபகம் வருவது 'ஜானு' கேரக்டர்தான். இந்த கேரக்டர் இன்னும் பல ஆண்டுகளுக்கு பல ஆண்டுகளுக்கு மறக்க முடியாத ஒரு கேரக்டராக இருக்கும்

யோகிபாபு படத்திற்கு எதிராக சென்னை போலீஸிடம் புகார்!

யோகிபாபு, வருண் நடிப்பில் முரட்டு சிங்கிள் இயக்கத்தில் ஐசரி கணேஷ் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'பப்பி'. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. 

விஜய்யுடன் நடித்த அனுபவம்: முன்னாள் கால்பந்து வீரரின் நெகிழ்ச்சியான பேட்டி!

அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் 'பிகில்' படத்தில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.