close
Choose your channels

எப்பவாவது ஹிட் குடுத்தா ஓகே. எப்ப பாத்தாலும் ஹிட் குடுத்தா எப்பிடி? 'கர்ணன்' படத்திற்கு பிரபல நடிகரின் விமர்சனம்!

Saturday, April 10, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடித்த வடசென்னை, மாரி 2, அசுரன், பட்டாஸ் ஆகிய நான்கு திரைப்படங்கள் தொடர்ச்சியாக ஹிட் ஆகியுள்ள நிலையில் நேற்று வெளியான ‘கர்ணன்’ திரைப்படமும் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 10 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இந்த படம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக டிரேடிங் வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த நிலையில் ‘கர்ணன்’ படத்திற்கு ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர் என்பதும், அவர்கள் தங்களது சமூக வலைத்தளத்தில் தனுசுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் இந்த படத்தை பார்த்த பிரபல காமெடி நடிகர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில் ’எப்பவாவது ஹிட் கொடுத்தா ஓகே, எப்ப பார்த்தாலும் ஹிட் கொடுத்தா எப்படி தனுஷ் ப்ரோ? கர்ணன் படக்குழுவிற்கு எனது வாழ்த்துக்கள்' என்று கூறியுள்ளார்.

தனுஷுடன் விவேக் நடித்த ’படிக்காதவன்’ படத்தில் இதே போன்ற ஒரு வசனம் வரும் என்றும் அந்த வசனத்தின் பாணியிலேயே ‘கர்ணன்’ படக்குழுவினர்களுக்கு தனது வாழ்த்துக்களை விவேக் தெரிவித்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.