அஜித், விஜய் வளர்ச்சிக்கு இது ஒன்றே காரணம்: விவேக்

  • IndiaGlitz, [Wednesday,April 03 2019]

இயக்குனர் இமயம் கே.பாலசந்தர் அவர்களால் அறிமுகம் செய்யப்பட்டு கடந்த பல வருடங்களாக வெற்றிகரமான காமெடி நடிகராக தொடர்ந்து வரும் நடிகர் விவேக், நடிகர்கள் அஜித், விஜய் இருவருடனும் பல படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் இருவரின் வளர்ச்சிக்கான முக்கிய காரணத்தை தெரிவித்துள்ளார்.

அஜித், விஜய் ஆகிய இருவரது வளர்ச்சியும் பிரமிக்கத்தக்கது. ஆனால் இருவருமே தங்களது வளர்ச்சியை தலைக்கு ஏற்றி கொள்ளாதவர்கள். அவர்களது வளர்ச்சிக்கும் இதுதான் முக்கிய காரணம். இன்றும் இருவருமே ஆரம்பகாலத்தில் இருந்தது போலவே எளிமையுடன் உள்ளனர். மேலும் அஜித், விஜய் பெயர்களை சொல்லி பலர் சண்டை போட்டு கொண்டாலும் இருவரும் இன்றும் நட்புடன் தான் உள்ளனர்.

அஜித்துடன் சமீபத்தில் 'விஸ்வாசம்' படத்தில் நடித்து முடித்துவிட்டேன். விஜய்யுடன் இப்போது நடிக்கவுள்ளேன். 'குருவி' படத்திற்கு பின்னர் நீண்ட இடைவெளி ஆகிவிட்டதால் இந்த படத்தில் காமெடி பிரம்மாதமாக ஒர்க் அவுட் ஆக வேண்டும் என்பதில் சீரியஸாக இருக்கின்றேன். விஜய்யும் கலக்குவோம் என்று கூறியுள்ளார் என்று விவேக் தெரிவித்தார்.

மேலும் 'இன்னிசை மழை' படத்தில் குரூப் டான்சர்களில் ஒருவராக விஜய் நடித்திருப்பார். அன்று பார்த்த அதே விஜய்யைத்த்தான் இன்றும் பார்க்கின்றேன். அவர் மாறவே இல்லை என்பது பெரும் ஆச்சரியம்' என்றும் விவேக் கூறினார்.
 

More News

பப்ஜி விளையாட அனுமதிக்காததால் தூக்கில் தொங்கிய 10ஆம் வகுப்பு மாணவன்

பப்ஜி விளையாட்டால் பல இளைஞர்கள், சிறுவர்கள் அடிமையாகியுள்ள நிலையில் இந்த விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது

பொன்னியின் செல்வன்: யார் யாருக்கு எந்த கேரக்டர்?

அமரர் கல்கியின் 'பொன்னியின் செல்வன்' நாவலை எம்ஜிஆர், சிவாஜி, கமல் உள்பட பலர் திரைப்படமாக்க முயன்றபோதிலும் அது நிறைவேறவில்லை.

கமல் கட்சிக்கு ரஜினி ஆதரவா?

வரும் மக்களவை தேர்தலில் தனது கட்சிக்கு ஆதரவு அளிக்குமாறு ரஜினியிடம் கேட்டிருப்பதாகவும், அவர் நல்ல முடிவு எடுப்பார் என்று தான் நம்புவதாகவும் கமல்ஹாசன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

5 சவரம் வரை தங்கநகைக்கடன் தள்ளுபடி: மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு

வங்கிகளில் தங்க நகைகளை 5 சவரன் வரை விவசாயிகள் அடமானம் வைத்திருந்தால் அந்த கடன் தள்ளுபடி செய்யப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புதிய வாக்குறுதி ஒன்றை அளித்துள்ளார். 

ரஜினிகாந்த் - ஏ.ஆர்.முருகதாஸ் படத்தின் முக்கிய பணி இன்று தொடக்கம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ள திரைப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி தொடங்கவுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது