close
Choose your channels

'இறப்பு' குறித்து நடிகர் விவேக் பதிவு செய்த டுவிட்!

Saturday, April 17, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல காமெடி நடிகர் விவேக் அவர்கள் இன்று அதிகாலை காலமான செய்தி திரையுலகினருக்கு மட்டுமன்றி பொதுமக்களுக்கும் பேரதிர்ச்சியாக இருந்தது. சின்ன கலைவாணர் என்ற பட்டத்துடன் திரைப்படங்களில் சமூக கருத்துக்களையும் நகைச்சுவையோடு கொடுத்து வந்த ஒரு மாபெரும் கலைஞரை தமிழக மக்கள் இழந்து விட்டார்கள் என்பதை நினைக்கும் போது மிகப்பெரிய சோகமாக உள்ளது

இந்த நிலையில் விவேக் அவர்களின் உடல் தற்போது அவருடைய விருகம்பாக்கம் வீட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் சமூக வலைதளங்களில் குறிப்பாக டுவிட்டரில் ஆக்டிவ்வாக இருக்கும் விவேக் அவர்கள் அவ்வப்போது சமூகக் கருத்துக்களையும் பதிவு செய்து வருவார். குறிப்பாக ஆன்மீக கருத்துக்கள், விவேகானந்தர், வள்ளலார் குறித்த கருத்துக்களை அவர் பதிவு செய்தது அனைவரையும் கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இறப்பு குறித்தும் விவேக் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த டுவிட்டில், ‘எளிய தன்னலமற்ற தூய வாழ்வும் ஒருநாள் முடிந்து தான் போகிறது. எனினும் பலர் இறப்பர், சிலரே இறப்புக்குப் பின்னரும் இருப்பர் என்று பதிவு செய்துள்ளார். அவர் பதிவு செய்தபடியே விவேக் அவர்களும் இறப்புக்குப் பின்னர் மக்கள் மனதில் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.