close
Choose your channels

ஒருவரை இன்னொருவருடன் ஒப்பிட வேண்டாம்: விஜய், மகேஷ்பாபு குறித்து பிரபல நடிகர்

Wednesday, August 12, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடிய தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு தனது வீட்டில் செடியை நட்டு அது குறித்த வீடியோவை பதிவு செய்தார். மேலும் கிரீன் இந்தியா சேலஞ்சை அவர் தளபதி விஜய்க்கும் விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த சேலஞ்சை ஏற்று கொண்ட தளபதி விஜய் நேற்று தனது வீட்டின் தோட்டத்தில் தானே மண்வெட்டியால் குழி தோண்டி செடி நட்டார் என்பதும், இது குறித்த புகைப்படங்களை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்தார் என்பதும் இந்த புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இதுகுறித்து பிரபல காமெடி நடிகர் விவேக் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது: விஜய் மற்றும் மகேஷ்பாபு ஆகிய இருவருக்குமே மில்லியன் கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அவர்கள் இயற்கைக்கு ஏதாவது ஒரு நல்லது செய்யும்போது அவருடைய ரசிகர்களும் அதனால் தூண்டப்பட்டு அவர்களும் அந்த நல்லதை செய்து வருகின்றனர். இதை நாங்கள் பாராட்டுகிறோம். ஆனால் தயவு செய்து ஒருவரை இன்னொருவருடன் ஒப்பிட வேண்டாம். நமது அனைவரின் நோக்கம் ஒரு பசுமையான பூமியை உருவாக்க வேண்டும் என்பதுதான்’ என்று கூறியுள்ளார். நடிகர் விவேக்கின் இந்த பதிவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.