ஒருவரை இன்னொருவருடன் ஒப்பிட வேண்டாம்: விஜய், மகேஷ்பாபு குறித்து பிரபல நடிகர்

  • IndiaGlitz, [Wednesday,August 12 2020]

சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடிய தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு தனது வீட்டில் செடியை நட்டு அது குறித்த வீடியோவை பதிவு செய்தார். மேலும் கிரீன் இந்தியா சேலஞ்சை அவர் தளபதி விஜய்க்கும் விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த சேலஞ்சை ஏற்று கொண்ட தளபதி விஜய் நேற்று தனது வீட்டின் தோட்டத்தில் தானே மண்வெட்டியால் குழி தோண்டி செடி நட்டார் என்பதும், இது குறித்த புகைப்படங்களை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்தார் என்பதும் இந்த புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இதுகுறித்து பிரபல காமெடி நடிகர் விவேக் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது: விஜய் மற்றும் மகேஷ்பாபு ஆகிய இருவருக்குமே மில்லியன் கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அவர்கள் இயற்கைக்கு ஏதாவது ஒரு நல்லது செய்யும்போது அவருடைய ரசிகர்களும் அதனால் தூண்டப்பட்டு அவர்களும் அந்த நல்லதை செய்து வருகின்றனர். இதை நாங்கள் பாராட்டுகிறோம். ஆனால் தயவு செய்து ஒருவரை இன்னொருவருடன் ஒப்பிட வேண்டாம். நமது அனைவரின் நோக்கம் ஒரு பசுமையான பூமியை உருவாக்க வேண்டும் என்பதுதான்’ என்று கூறியுள்ளார். நடிகர் விவேக்கின் இந்த பதிவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

More News

அஜித்-ஷாலினி காதலுக்கு உதவிய ஏகே 47: பிரபல நடிகர் தகவல்!

தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளில் ஒன்றான அஜித், ஷாலினி காதலுக்கு பிரபல நடிகர் ஒருவரும் ஏகே 47ம், உதவியாக இருந்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது 

அமெரிக்காவில் ரூ.4 கோடி ஸ்காலர்ஷிப் பெற்ற இந்திய மாணவி பரிதாப பலி: ஈவ் டீசிங் காரணமா?

அமெரிக்காவில் சுமார் 4 கோடி ஸ்காலர்ஷிப் பெற்று படித்து வந்த இந்திய மாணவி ஒருவர் பரிதாபமாக சாலை விபத்தில் மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சஞ்சய்தத்துக்கு என்ன ஆச்சு? 'கேஜிஎப் 2' படத்தில் இருந்து விலகுகிறாரா?

பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய்தத் திடீரென தான் சிலகாலம் திரையுலகில் இருந்து விலகி இருக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

மகேஷ்பாபு சவாலை ஏற்ற தளபதி விஜய்: இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடியபோது, க்ரீன் இந்தியா சேலஞ்ச் அடிப்படையில் தனது வீட்டில் செடிகளை நட்டு வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.

பிரபல தயாரிப்பாளர் மறைவிற்கு 'சிலம்பாட்டம்' சிம்பு இரங்கல்

நடிகர் சிம்பு நடித்த 'சிலம்பாட்டம்' உள்பட பல திரைப்படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பாளர் சுவாமிநாதன் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தார் என்ற செய்தியை பார்த்தோம்