கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க நடிகர் விவேக் கூறும் டிப்ஸ்கள்!

  • IndiaGlitz, [Sunday,March 08 2020]

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தங்களை எப்படி பாதுகாத்துக் கொள்ளலாம் என்று நடிகர் விவேக் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் அவர் ’கை குலுக்குவதை நிறுத்திவிட்டு தமிழக கலாச்சாரமான கையெடுத்து கும்பிட்டாலே கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்கலாம் என்று அவர் கூறியுள்ளார்

கொடைக்கானலில் இருந்து பதிவு செய்யப்பட்ட இந்த வீடியோவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது: கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுக்க அச்சுறுத்தி வரும் ஒரு வைரஸ். முதலில் இந்தியா போன்ற அதுவும் தமிழ்நாடு போன்ற ஒரு அதிகமான வெப்பம் உள்ள இடத்தில் கொரோனா வைரஸ் தாமாகவே அழிந்து விடும். எனவே கொரோனா குறித்து யாரும் பயப்படவேண்டாம்

இருப்பினும் பாதுகாப்பு காரணமாக அனைவரும் செய்ய வேண்டியது ஒன்று என்னவெனில் அனைவரும் சோப்பு போட்டு கைகளை அடிக்கடி நன்றாக கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இருமல், தும்மல் வந்தால் கைகுட்டை மூலம் வாய் மற்றும் மூக்கை மூடிக் கொள்ள வேண்டும்

மேலும் இருமல் அல்லது தும்மல் அடிக்கடி வருபவருடன் நெருங்கி பழக கூடாது. அவர்களிடம் மாஸ்க் போட்டு கொள்ளுமாறு அறிவுறுத்த வேண்டும். எல்லாவற்றையும் விட முக்கியமாக தமிழக கலாச்சாரம் என்ற ஒன்று உள்ளது. அதன்படி யாருக்கும் கைகொடுக்காமல் கையெடுத்து கும்பிட்டு வணக்கம் தெரிவிக்க வேண்டும். இதனை கடைபிடித்தால் கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்கலாம் என்று நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்

More News

மகளிர் தினத்தில் நயன்தாரா செய்த அசத்தலான விஷயம்!

இன்று மார்ச் 8ஆம் தேதி மகளிர் தினம் உலகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் சென்னையில் பெண்கள் பங்கேற்கும் விழிப்புணர்வு பேரணி ஒன்றை நயன்தாரா தொடங்கி வைத்து சிறப்பித்தார்

இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு வாழ்த்து கூறிய பிரபல நடிகை

கடந்த சில நாட்களாக ஆஸ்திரேலியாவில் மகளுருக்கான உலக கோப்பை டி20 போட்டி நடைபெற்று வந்தது தெரிந்ததே. இந்த போட்டியின் இறுதிப்போட்டி

சவால்களை தகர்த்தெறியும் வீரப்பெண்மணிகள்: கமல்ஹாசனின் மகளிர் தின வாழ்த்து

மார்ச் 8 தினமான இன்று நாடு முழுவதும் மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் குடியரசு தலைவர், பிரதமர் உள்பட பல பிரபலங்கள் மகளிர் தின வாழ்த்துக்களை தங்களுடைய

15 வயது சென்னை சிறுவனுக்கு கொரோனா? அதிர்ச்சி தகவல்

சீனாவில் உள்ள வூகான் என்ற மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ் அந்நாடு முழுவதும் பரவி சுமார் 2 ஆயிரம் உயிர்களை பலி வாங்கியுள்ளது என்பது தெரிந்ததே.

தமிழகத்திலும் நுழைந்த கொரோனா: காஞ்சிபுரம் நபருக்கு அறிகுறி என தகவல்

சீனாவை அடுத்து இந்தியா உள்பட பல்வேறு நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் தற்போது தமிழகத்திலும் கொரோனா பரவிவிட்டது என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது