Download App

Vizhithiru Review

ஹைப்பர் லிங்க் திரைக்கதை யுக்தியை பயன்படுத்தி சமீப காலங்களில் வந்த மாநகரம் போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றன அந்த வகையில் நாம் ஒருவருக்கு நன்மையோ தீமையோ செய்துவிட்டால் அவர்கள் நம் வாழ்க்கையில் ஒரு பகுதி ஆகிவிடுவார்கள் என்ற தத்துவத்தை ஐந்து கதைகள் கொண்டு இறுதியில் இணைத்து சொல்லியிருக்கிறார் மீரா கதிரவன்.

விழித்திரு படத்தில் இடம்பெறும் ஐந்து கதைகளுமே ஒரே இரவில் நடக்கின்றன. கிருஷ்ணா ஒரு கால் டாக்சி ஓட்டுநர் ஊருக்கு தன் தங்கையையும் தாயையும் பார்க்க புறப்படும்போது பர்ஸை தொலைத்துவிடுகிறார் வேறு வழி இல்லாமல்அரசியல் கொலையை துப்பறிந்து ஆதாரம் வைத்து கொண்டிருக்கும் பத்திரிகையாளர் எஸ் பி பி சரணை ஏற்றி கொண்டு இரண்டு மணி நேரம் கார் ஓட்ட ஒத்துக்கொள்கிறார். விதார்த் ஒரு வீட்டில் திருட போக அங்கு மணமகள் கோலத்தில் கட்டப்பட்டிருக்கும் சாய் தன்ஷிகாவை சந்திக்கிறார். கிழட்டு கணவனிடமிருந்து காப்பாற்றும்படி கூற நகைகளை சுருட்டி கொண்டு இருவரும் வெளியேறுகிறார்கள். குருடரான வெங்கட் பிரபுவும் அவர் மகள் சாராவும் தொலைந்து போன நாய் குட்டியை தேடி செல்கின்றன. திமிர் பிடித்த பெரும் பணக்காரரான ராகுல் பாஸ்கரன் பெங்களுருவில் எரிகா பெர்னாண்டஸை கணக்கு பண்ண முயற்சிக்க அவள் என்னை சென்னை வரை காரில் அழைத்து செல்லும் வழியில் கவர்ந்ததால் நான் கிடைப்பான் என்று கூறுகிறார் அவரும் ஒத்துக்கொள்கிறார். இடைவேளை திருப்பமாக சரண் கொல்லப்பட போலீஸ் கிருஷ்ணாவை துரத்த ஆரம்பிக்கிறது தன்ஷிகாவும் விதாரத்துக்கு ஒரு சூழ்ச்சி வலை பின்னுகிறார் வெங்கட் பிரபுவின் மகள் சாரா கடத்த படுகிறாள் அதற்கு பின் இவர்கள் என்னானார்கள் எப்படி கதைகள் இணைந்தன என்பதே மீதி கதை.

தேர்ந்த நடிகர்கள் அனைவருமே விழித்திரு படத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறார்கள். கிருஷ்ணா அப்பாவி நடிப்பில் கச்சிதம் தான் கேட்ட போலீஸிடம் மாட்டி கொண்டு ஓடும்பொழுது கூட குழந்தை சாராவை காப்பாற்றும் இடம் தூள். விதார்த் கடைசியில் நடக்கும் துயரத்திற்கு தான் தான் காரணம் என்று தெரிந்து சைவ கிடங்கைள செல்லில் பேசும்போது நெகிழ வைக்கிறார். நிமிடத்துக்கு நிமிடம் குணாதிசயம் மாறும் கதாபாத்திரத்தில் சாய் தன்ஷிகா மின்னுகினார். கண் தெரியாதவராக வந்து குழந்தையிடம் பாசம் காட்டும் வெங்கட் பிரபு குழந்தை சாரா ஆகியோர் மனம் கவர்க்கின்றனர். புதுமுகம் ராகுல் பாஸ்கரன் மற்றும் எரிகா பெர்னாண்டஸ் கவனிக்கத்தகுந்த நல்ல நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். கிருஷ்ணாவுக்கு உதவி செய்யும் ரேடியோ ஜாக்கியாக அபிநயா மற்றும் சுதா சந்திரன் உயர் போலீஸ் அதிகாரியாக வரும் நடிகரும் குறை சொல்ல முடியாத படி நடித்திருக்கிறார்கள். படத்தில் ஒட்டாதது தம்பி ராமையாவின் அசட்டு காமடி.

படத்தின் முதல் பகுதியில் ஐந்து கதைகளையும் சொல்லிய விதமும் இடைவேளையில் ஒவ்வொரு கதாபாத்திரமும் எதிர்கொள்ளப்போகும் கஷ்டங்களையும் வைத்து முடிச்சி போட்டு எதிர்பார்ப்பபை மீரா கதிரவன் எகிற வைக்கிறார். கொடூர போலீஸ் பிடியில் சிக்கிரியிருக்கும் கிருஷ்ணா ரேடியோ ஜாக்கி அபிநயாவின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவரிடம் தன் நிலையை சொல்லும் காட்சிகள் விறுவிறுப்பு. தான் சொல்ல வந்த கருத்தை இறுதியில் ஆழமாக பதித்த விதத்தில் மீரா கதிரவன் மிளிர்கிறார்.

விழித்திரு படத்தின் மிக பெரிய மைனஸ் இடைவேளை வரை நேர்த்தியாகவும் யதார்த்தமாகவும் நகரும் கதை அதன் பிறகு நம்ப முடியாத சம்பவங்களால் சிக்கி அல்லோலப்படுகிறது. படு பயங்கர என்சௌண்டேர் போலீஸ் டீமிடமிருந்து ஒரு தடவை அல்ல பல தடவை கிருஷ்ணா விளையாட்டு பிள்ளை போல தப்பித்து விடுவது நகைச்சுவையாக மாறுவது மட்டுமில்லாது அவர் கதாபாத்திரத்தின் தியாகத்தையே நிலை குலைய செய்து விடுகிறது. சாய் தன்ஷிகாவும் விதார்த்தும் எதற்காக ஒன்றாக சைக்கிளில் சுற்று சுற்றி வருகிறார்கள் என்பது புரியாத புதிர். வெங்கட் பிரபு சாரா சம்பத்தப்பட்ட சம்பவங்கள் உணர்வு பூர்வமாக இருந்தாலும் பெரிதாக பாதிப்பு ஏற்படுத்த வில்லை. ஒப்பிட்டு பார்க்கும்போது ராகுல் பாஸ்கரன் எரிகா பகுதியே தேவலாம். படத்தில் சம்பந்தமே இல்லாமல் திணிக்கப்பட்டிருக்கும் டி ராஜேந்தரின் குத்து பாட்டு அவருக்கும் தன்ஷிகாவுக்குமான மேடை தடை போலவே நமத்து விடுகிறது.

படத்தின் பெரும்பாலான காட்சிகள் இரவில் நடக்க விஜய் மில்டன் மற்றும் ஆர் வி சரணின் காமிரா வெகுவாக காய் கொடுத்திருக்கிறது. பிரவீன் மற்றும் ஸ்ரீகாந்தும் எடிட்டிங்கில் படத்தை எவ்வளவுக்கு எவ்வளவு விறுவிறுப்பாக்க முடியுமோ அவ்வளவு முயன்றிருக்கின்றனர். சத்யன் மகாலிங்கம் இசை ஓகே ரகம். மீரா கதிரவன் ஒரு நல்ல தத்துவத்தையும் சில தேவையான கருத்துக்களையும் தன் படத்தில் சொல்ல முற்பட்டதற்காக பாராட்டலாம்.

சிறந்த தத்துவம் மற்றும் சில நல்ல கருத்துகளுக்காகவும் நடிகர்களின் நடிப்புகாகவும் விழித்திரு படத்தை தாராளமாக பார்க்கலாம்.

Rating : 2.5 / 5.0