close
Choose your channels

விஜே சித்ராவின் கடந்த ஆண்டு அன்னையர் தின வீடியோ வைரல்: என்ன செய்திருக்கிறார் பாருங்கள்!

Tuesday, May 11, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பொதுவாக அன்னையர் தினத்தில் தாயுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவு செய்து ஒரு வாழ்த்து தெரிவிப்பது மட்டுமே திரையுலக பிரபலங்களின் வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன் மறைந்த தொலைக்காட்சி நடிகை விஜே சித்ரா தனது அன்னைக்கு கோவிலில் சிறப்பு வழிபாடு செய்து உள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி தொடரான ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் முல்லை என்ற கேரக்டரில் நடித்தவரும் பல நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டவருமான விஜே சித்ரா, கடந்த சில மாதங்களுக்கு முன் திடீரென தனியார் ரிசார்ட் ஒன்றில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமீபத்தில் அன்னையர் தினத்தில் அனைத்து திரையுலக பிரபலங்களும் தங்கள் அன்னையருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவு செய்து வாழ்த்துக்களை தெரிவித்த நிலையில் கடந்த ஆண்டு அன்னையர் தினத்தில் விஜே சித்ரா தனது தாய் தந்தை ஆகிய இருவரையும் கோவிலுக்கு அழைத்துச் சென்று அவர்களுக்காக சிறப்பு பூஜை நடத்திய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது

தாயையும் தந்தையையும் தெய்வத்திற்கு சமமாக மதித்து அவர்களுக்கு சிறப்பு பூஜை செய்த சித்ரா இன்று உயிருடன் இல்லை என்று நினைக்கும் போது மிகவும் வருத்தமாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.