நான் யாருன்னு உங்களுக்கு தெரியாது.. இனிமே தெரிஞ்சுக்குவ.. 'கூலி' படத்துடன் மோதும் படத்தின் டீசர்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த "கூலி" திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அதே நாளில் வெளியாகும் மற்றொரு மாஸ் திரைப்படத்தின் டீசர் சற்று முன்னர் வெளியாகி, இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரபல பாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷன் மற்றும் பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் "வார் 2’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகும் இந்த திரைப்படம், டீசர் முடிவில் ஆகஸ்ட் 14ஆம் தேதியே வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நாளில் தான் ரஜினிகாந்த் நடித்த லோகேஷ் கனகராஜ் இயக்கிய "கூலி" திரைப்படமும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
எனவே, இந்த ஆண்டின் சுதந்திர தின விருந்தாக, இரண்டு மிகப்பெரிய மாஸ் திரைப்படங்கள் வெளியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஹிரித்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர், கியாரா அத்வானி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த ’வார் 2’ திரைப்படத்தை அயன் முகர்ஜி இயக்கியுள்ளார்.
The calm is over...The storm begins! #War2Teaser out now. #War2 only in theatres from 14th August. Releasing in Hindi, Telugu and Tamil.@tarak9999 @advani_kiara #AyanMukerji @yrf #YRFSpyUniverse
— Hrithik Roshan (@iHrithik) May 20, 2025
Hindi - https://t.co/dYc1Gl6LYM
Telugu - https://t.co/sPqqX7JE4e
Tamil -… pic.twitter.com/392QNQ2MQE
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com