தென்னிந்திய மாஸ் நடிகருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய டேவிட் வார்னர்!

பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் இந்த கொரோனா விடுமுறையில் அவ்வப்போது தமிழ் தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களின் பாடல்களுக்கு மனைவி மற்றும் குழந்தைகளுடன் நடனமாடி அதுகுறித்த வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார் என்பது தெரிந்ததே.

’தேவர் மகன்’ படத்தில் இடம்பெற்ற இஞ்சி இடுப்பழகி, ’ஜென்டில்மேன்’ படத்தில் இடம்பெற்ற ’ஒட்டகத்தை கட்டிக்கோ, ’காதலன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ’முக்காலா முக்காபுலா’ ’ஹவுஸ்புல் 4’ படத்தில் இடம்பெற்ற ’பாலா பாலா’ உள்பட பல பிரபலங்களின் பாடல்களுக்கு அவர் நடனமாடிய வீடியோ இன்ஸ்டாகிராமில் லைக்ஸ்களை அள்ளியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று தென்னிந்திய மாஸ் நடிகர்களில் ஒருவரான மகேஷ்பாபுவின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அவருக்காக ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். மகேஷ்பாபு நடித்த சூப்பர்ஹிட் படங்களில் ஒன்றான ‘Sarileru Neekevvaru’ என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற ‘மைண்ட் பிளாக்’ என்ற பாடலுக்கு வார்னர், வார்னரின் மனைவி மற்றும் குழந்தைகள் நடனமாடியுள்ளனர். மேலும் இந்த வீடியோவின் கேப்ஷனில் மகேஷ்பாபுவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்றும் வார்னர் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.