ஒபாமா உள்ளிட்ட பிரபலங்களின் டிவிட்டரை ஹேக் செய்தது ஒரு சிறுவனா??? தொடரும் பரபரப்பு!!!

  • IndiaGlitz, [Saturday,August 01 2020]

 

கடந்த மாதம் 24 ஆம் தேதியன்று பிற்பகலில் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தும் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அதில் முன்னாள் அதிபர் பாராக் ஒபாமா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க், அமேசான் நிறுவனர் லாரி ஜெப் பெஸோஸ், அமெரிக்க அதிபர் வேட்பாளராக போட்டியிடும் ஜோ பிடன், ராப் பாடகர் கன்யே வெஸ்ட் உள்ளிட்ட உலகின் பல முக்கிய பிரபலங்களின் டிவிட்டர் கணக்கை ஒரே நேரத்தில் ஹேக் செய்து பிட்காயின் கொள்ளையில் ஈடுபட்டதாகப் பரபரப்பு கிளம்பியது. இந்த விவகாரத்தில் மூளையாக இருந்து பிரபலங்களின் டிவிட்டர் கணக்கை ஹேக் செய்தது 17 வயதுடைய சிறுவன் என்பது தற்போது தெரிய வந்திருக்கிறது.

இச்சம்பவத்தில் பிரபலங்களின் டிவிட்டர் கணக்குகளை ஹேக் செய்து அதன் மூலம் மக்களிடம் நன்கொடையை கேட்டதாகவும் அந்த நன்கொடையை பிட்காயின் வடிவில் செலுத்துமாறும் தொடர்ந்து அமெரிக்க மக்களுக்கு செய்திகள் அனுப்பப்பட்டன. இதனால் 1 லட்சம் அமெரிக்க டாலர் கொள்ளை அடிக்கப் பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. இந்த விவகாரத்தில் தற்போது கிராகாம் கிளார் என்ற 17 வயதுடைய சிறுவன் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புளோரிடாவை சேர்ந்த நிமா பாசில் (22), இங்கிலாந்தை சேர்ந்த ஷெப்பர்ட்டு (19) என இந்த ஒட்டுமொத்தக் கும்பலும் மிகவும் இளவயது உடையவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதில்17 வயதுடைய கிளார்க் தான் மூளையாகச் செயல்பட்டார் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

தற்போது இளம் வயதுடைய சிறுவர்கள் எதற்காக பிரபலங்களின் டிவிட்டர் கணக்குகளை ஹேச் செய்ய வேண்டும் என அமெரிக்க உளவுத் துறை தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறது. காரணம் இப்படி திருடிய பணத்தை அவ்வளவு எளிதாகப் பயன்படுத்த முடியாது எனவும் பிட்காயின் வர்த்தக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். இதனால் வேறு விவகாரங்களும் இதில் ஒளிந்து இருக்குமோ என்கிற ரீதியில் வழக்கு விசாரணை நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.

More News

'சின்ன வயசிலேயே நான் பெரிய பையன்': வைரலாகும் பிரபல இயக்குனரின் சிறுவயது புகைப்படம்!

'சின்ன வயசுலயே நான் பெரிய பையன்' என்ற கேப்ஷனுடன் பிரபல இயக்குனர் ஒருவரின் சிறுவயது புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது

3 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு: கொரோனா கால ஹீரோவின் அடுத்த உதவி!

இந்த கொரோனா வைரஸ் ஊரடங்கு காலத்தில் பெரிய பெரிய மாஸ் ஹீரோக்கள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட தொகையை மட்டும் அரசுக்கு நன்கொடையாக வழங்கிவிட்டு அமைதியாக உள்ளனர்.

சுஷாந்த் தற்கொலைக்கு நான் காரணமா? காதலி ரியாவின் அதிர்ச்சி வீடியோ 

சமீபத்தில் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் அவர்கள் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில்

ஆபர் விலையில் கோழிக்கறி!!! மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 800 பேர்!!! பரபரப்பு சம்பவம்!!!

மத்திய கிழக்கு நாடான ஜோர்டனில் கெட்டுப்போன இறைச்சியை உணவகம் ஒன்று சலுகை விலையில் விற்றதாகக் கூறப்படுகிறது.

போதைக்காக உயிரைவிட்ட 38 பேர்!!! தொடரும் அவலம்!!!

பஞ்சாப் மாநிலத்தில் ஊரடங்கு காரணமாக மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன.