ஐபிஎல் போட்டியில் பிஹு டான்ஸ் ஆடி மகிழ்ந்த இளம் வீரர்... வைரல் வீடியோ!

நேற்றைய ஐபிஎல் போட்டியின்போது ஒரு விக்கெட்டை வீழ்த்தியதற்காக கிரிக்கெட் கிரவுண்டிற்குள் இருந்து கொண்டே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைச் சேர்ந்த இளம் வீரர் ரியான் பராக் நடனம் ஆடி மகிழ்ந்து இருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

நேற்றைய ஐபிஎல் போட்டி டெல்லி கேப்பிடள்ஸ் அணிக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்றது. இதில் முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தவுடன் டெல்லி வீரர்கள் களம் இறங்கினர். இப்படி களம் இறங்கிய மூத்த விரர்கள் பலரும் அடுக்கடுக்காக விக்கெட்டை இழந்தது டெல்லி அணிக்கும் மிகப்பெரும் சறுக்கலாகப் பார்க்கப்பட்டது. ப்ரிதிவி ஷா 2 ரன்னிலும் தவான் 9 ரன்னிலும் ரஹானே 8 ரன்களிலும் அவுட்டானதைத் தொடர்ந்து கிரிக்கெட் புயல் ரிஷப் பண்ட் களம் இறங்கினார்.

இப்படி 36 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து இருந்த டெல்லி அணியின் சார்பாக ரிஷப்பும் அறிமுக வீரர் லலித் யாதவ்வும் கூட்டணி வைத்துக் கொண்டு கிரிக்கெட் கிரவுண்டை சிறிது நேரத்திலேயே ஆக்கிரமிக்கத் தொடங்கினர். இதனால் ரன்களும் மளமளவென எகிறத் தொடங்கியது. இந்நிலையில் 13 ஆவது ஓவரில் 4 ஆவது பந்தை வீசிக்கொண்டு இருந்த ராஜய்தான் வீரர் ரியான் பராக் நிலைமையைப் புரிந்துகொண்டு உடனே தன்னுடைய ஸ்டைலை மாற்றி பந்து வீசினார்.

இதனால் ரிஷப் பண்ட் லாங் ஆஃப் திசையில் பந்தை விளாசினார். கூடவே ரன் எடுக்க ரிஷப் ஓடத் தொடங்கியபோது, அந்த பந்து ரியான் பராக்கின் கைகளுக்கு வந்தது. இதனால் உஷாரான ரியான் பந்தை ஸ்டெம்பை நோக்கி வீச ரிஷப் பண்ட் ரன் அவுட்டானார். இப்படி, டெல்லி அணி மீண்டும் ரன் ரேட்டிங்கை உயர்த்திவிடும் எனப் பலரும் வியந்து பார்த்துக் கொண்டு இருந்த சமயத்தில் ரியான் ரிஷப் பண்டின் விக்கெட்டை வீழ்த்தி ராஜஸ்தான் அணிக்கு மிகப்பெரிய வெற்றி வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார் ரியான் பராக்.

இந்தச் சந்தோஷத்தில்தான் இளம் வீரர் ரியான் பராக் அசாம் மாநிலத்தின் பாரம்பரிய நடனமான பிஹு நடனத்தை ஆடி தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார். இப்படி கிரவுண்டிற்குள் இளம் வீரர் நடனம் ஆடிய காட்சி ரசிகர்களிடைய பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் பெரும் கவனம் பெற்று இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

காமெடி நடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதி: என்ன காரணம்?

தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளதால் கோலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

தொடக்க ஆட்டக்காரர்களை மாற்றுவாரா தோனி? இன்று பஞ்சாபுடன் பலப்பரிட்சை!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் எட்டாவது போட்டியான இன்று சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் இடையே நடைபெற உள்ள நிலையில் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மாற்றம் இருக்குமா?

நேற்று புகார் அளித்த நடிகை ராதா இன்று வாபஸ்: என்ன நடந்தது?

தன்னுடைய இரண்டாவது கணவர் தன்னை அடித்து கொடுமைப்படுத்துவதாக நேற்று 'சுந்தரா டிராவல்ஸ்' நடிகை ராதா விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில்

30 ஆண்டுகள் கழித்து உருவாகும் இரண்டாம் பாக திரைப்படம்: ராஜ்கிரண் அறிவிப்பு

நடிகர் ராஜ்கிரண் நடிப்பில் இயக்குனர் கஸ்தூரி ராஜா இயக்கிய 'என் ராசாவின் மனசிலே' என்ற திரைப்படம் 1991 ஆம் ஆண்டு வெளியான நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் 30 ஆண்டுகள்

பவுண்டரி லைனை பேட்டால் அடித்த விராட் கோலி… இணையத்தில் வெடிக்கும் சர்ச்சை!

2021 ஐபிஎல் போட்டியை ஒட்டி ஏப்ரல் 14 ஆம் தேதி பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் ஹைத்ராபாத் அணியும் மோதிக் கொண்டன.