செம்பரபாக்கம் ஏரியின் நீர்மட்டம்!!!

  • IndiaGlitz, [Tuesday,November 24 2020]

 

சென்னையில் நேற்று முதல் பெய்துவரும் தொடர்மழையின் காரணமாக செம்பரபாக்கம் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது என பொதுப்பணித் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர். நிவர் புயல் ஏற்படுத்தி தாக்கத்தால் மேலும் அப்பகுதியில் கனமழை அதிகரிக்கும் எனக் கருதப்படும் நிலையில் செம்பரபாக்கம் ஏரி முழுவதும் நிரம்பி வழிய வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

செம்பரபாக்கம் ஏரியின் மொத்த உயரம் 24 அடி. அதன் நீர்பிடிப்பு பகுதிகளில் ஒரு வாரத்திற்கு முன்பு பெய்த கனமழை காரணமாக ஏரியின் நீர்மட்டம் 21 அடியை தாண்டியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நிவர் புயலின் காரணமாக நேற்று இரவு முதல் சென்னையின் அனைத்துப் பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையின் காரணமாக ஏரியின் நீர்மட்டம் தற்போது 22 அடியை விரைவில் எட்டவுள்ளது.

இந்நிலையில் அந்த ஏரியின் நீர்மட்டம் குறித்து பொதுப்பணித் துறையினர் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர் எனவும் செம்பரபாக்கம் ஏரியின் நீர்மட்டம் குறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். முன்னதாக செம்பரபாக்கம் ஏரியில் அறிவிப்பின்றி திறந்து விடப்பட்ட நீரினால் ஒட்டுமொத்த சென்னை மக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். உயிரிழப்புகளும் ஏற்பட்டது. இதனால் செம்பரப்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் மக்கள் மத்தியில் எப்போதும் ஒருவித பீதியை ஏற்படுத்தியே வருகிறது.

More News

திமுகவில் இணைந்த எம்ஜிஆர்-சிவாஜியுடன் நடித்த பழம்பெரும் நடிகரின் மகன்!

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நடித்த காஞ்சித்தலைவன், ராஜாதேசிங்கு உள்ளிட்ட படங்களிலும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த பராசக்தி, ஆலயமணி, எதிரொலி, தெய்வப்பிறவி

தளபதி விஜய்யின் அடுத்த பட இயக்குனர் இவரா? அப்ப நெல்சன் என்ன ஆச்சு?

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள 64ஆவது திரைப்படமான 'மாஸ்டர்' திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி பல மாதங்கள் ஆகியிருந்தாலும் அந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

கொரோனாவை மிஞ்சி…2020 இல் அதிகம் புழங்கிய வார்த்தைகள்!!!

2020 எனும் இந்த வருடத்தை உலக வரலாறு இருக்கும் வரையிலும் மறக்க முடியாது எனும் அளவிற்கு கொரோனா வைரஸ் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது.

உலகின் மிகப்பெரிய கல்லறை குறித்த சில மர்மத் தகவல்கள்!!!

சீனப்பெருஞ் சுவர் தான் உலகின் மிகப்பெரிய கல்லறை என அழைப்படுகிறது என்ற தகவலை கேட்டால் தலையே சுற்றலாம்.

அர்ச்சனாவின் மாஸ்க்கை கழட்டிய மாஸ் பாலாஜி: காரசாரமான வாக்குவாதம்!

பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்று படுவிறுவிறுப்பாக இருந்தது. ஆரியின் கோபம், ஆரியை ஒட்டுமொத்தமாக டார்கெட் செய்த போட்டியாளர்கள், அர்ச்சனாவை நாமினேட் செய்து அவருடைய குருப்பிஸத்தை