பிரதமர் மோடியின் CAA கருத்துக்கு பதில் கூற முடியாது.. நாங்கள் அரசியல் மற்றும் மதச்சார்பற்றவர்கள் - ராமகிருஷ்ண மடம்..!

குடியுரிமை திருத்த சட்டம் குறித்த பிரதமரின் கருத்துகளுக்கு பதிலளிக்க முடியாது என்று ராமகிருஷ்ண மடத்தின் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குவங்க மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோதி, அங்குள்ள ராமகிருஷ்ண மடத்துக்கு சென்றார். அப்போது பேசிய அவர், 'குடியுரிமை திருத்த சட்டம் என்பது குடியுரிமையை வழங்கும் சட்டம்; பறிப்பதற்கான சட்டம் அல்ல. இந்த சட்டத்தை புரிந்துகொள்வதற்கு அரசியல் கட்சிகள் தயாராக இல்லை. எதிர்க்கட்சிகள் மக்களை தவறாக வழிநடத்துகின்றன' என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், ராமகிருஷ்ண மடத்தில் அரசியல் தொடர்பான கருத்துகளை பிரதமர் பேசியதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எனினும், இந்த விவகாரம் குறித்து கருத்து ஏதும் தெரிவிக்க முடியாது என்று அந்த மடத்தின் நிர்வாகத்தின் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய ராமகிருஷ்ண மடத்தின் பொதுச்செயலாளரான சுவாமி சுவீரானந்தா, 'பிரதமரின் பேச்சு குறித்து நாங்கள் கருத்தேதும் தெரிவிக்க முடியாது. நாங்கள் முற்றிலும் அரசியலற்ற அமைப்பு. இங்கு அனைத்து மதங்களை சேர்ந்தவர்களும் எவ்வித வேறுபாடுமின்றி ஒன்றாக வாழ்ந்து வருகிறோம்' என்று அவர் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

More News

என் வயது முக்கியமில்லை.. மக்களுக்காக நான் செய்யும் பணி தான் முக்கியம்..! அமித்ஷாவுக்கு ம.பி முதல்வர் பதிலடி.

நாங்கள் எங்கள் பணிகளை நம்புகிறோம். வெற்று வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றுவதில்லை. மக்கள் என் பணியைத்தான் பார்க்கிறார்களே தவிர, என் வயதை இல்லை.

கேபிள் டிவியில் ஒளிபரப்பான 'தர்பார்': அதிர்ச்சியில் படக்குழு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'தர்பார்' திரைப்படம் கடந்த 9ஆம் தேதி வெளியான நிலையில் இந்த படம் கடந்த நான்கு நாட்களில் 128 ரூபாய் வசூல் செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.

இதை மட்டும் என்னை யாராலும் செய்ய வைக்க முடியாது: வெற்றிமாறன்

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான அசுரன் திரைப்படத்தின் நூறாவது நாள் விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்

'அசுரன்' பட விழாவில் கிண்டலடிக்கப்பட்ட விஜய்: நாகரீகமாக நடந்து கொண்ட தனுஷ்!

தனுஷ், மஞ்சுவாரியர் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தயாரித்த அசுரன் திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இந்த வயதில் எங்களை எதிர்க்காதீர்கள். உங்களுக்கு நல்லதில்லை...! ம.பி முதல்வரை எச்சரித்த அமித்ஷா.

குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த விடமாட்டோம் எனக் கமல்நாத், உரத்த குரல் எழுப்புகிறார். கமல்நாத் ஜி, நீங்கள் குரல் எழுப்புவதற்கான வயது இது இல்லை. கத்த வேண்டாம்.