மீண்டு வந்த மெர்சல் நிறுவனம்: ரசிகர்கள் ஆதரவு

  • IndiaGlitz, [Thursday,January 30 2020]

விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளிவந்த மெர்சல் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வசூலை குவித்த போதிலும் இந்த படத்தின் பட்ஜெட் மிக அதிகமான காரணத்தால் அதன் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கவில்லை என்று கூறப்பட்டது. அதுமட்டுமின்றி இந்த தயாரிப்பு நிறுவனத்தின் முந்தைய சில பொருளாதார சிக்கல்கள் காரணமாக இந்நிறுவனம் பெரும் பிரச்சினையில் சிக்கி இருப்பதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கம் திடீரென முடக்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்தது. இதனை அடுத்து மீண்டும் தங்களது டுவிட்டர் பக்கத்தை மீட்க முயற்சிகள் நடைபெற்றதாகவும் தற்போது அனைத்து பிரச்சினைகளும் சரிசெய்யப்பட்டு மீண்டும் தேனாண்டாள் பிலிம்ஸ் என்ற பெயரிலேயே டுவிட்டர் பக்கம் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது விரைவில் வெரிஃபிகேஷனும் பெற்று விடுவோம் என்று கூறப்பட்டுள்ளதை அடுத்து அந்நிறுவனத்திற்கு ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து கமெண்ட்டுகளை பதிவு செய்துவருகின்றனர்.

டுவிட்டர் பக்கத்தில் இருந்து மீண்டது போல் இந்நிறுவனம் தனது பொருளாதார சிக்கலில் இருந்தும் மிக விரைவில் மீண்டு, மீண்டும் பல திரைப்படங்களை தயாரிக்க வேண்டும் என்று அந்நிறுவனத்திற்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

More News

ரஜினியை உச்சநடிகர்கள் பின்பற்ற வேண்டும்: பிரபல தயாரிப்பாளர் அறிவுரை

சமீபத்தில் நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றில் பேசிய பிரபல தயாரிப்பாளர் கே ராஜன் அவர்கள் ரஜினி போல் மற்ற உச்ச நட்சத்திரங்களும்

'இந்தியன் 2' படப்பிடிப்பு குறித்த அசத்தலான தகவல்

உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் உருவாகிவரும் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

வீகன் (சைவ உணவு) டயட் உணவு முறை –  மாற்று உணவு வகைகள், எளிய வழி முறைகள்

நாம் உண்ணும் உணவுகளே பெரும்பாலான நோய்களுக்குக் காரணம் ஆகிவிடுகிறது என மருத்துவர்கள் தற்போது எச்சரித்து வருகின்றனர்

ரஜினியின் 'மேன் வெர்சஸ் வைல்ட்' குறித்து டிஸ்கவரி வெளியிட்ட அறிக்கை

அகில உலக அளவில்‌ புகழ்‌ பெற்ற டிஸ்கவரி தொலைகாட்சி குழுமம்‌, சூப்பர்ஸ்டார்‌ ரஜினிகாந்த்‌ உடன்‌ தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரித்துள்ளது. டிஸ்கவரி தொலைக்காட்சியில்‌ 'மேன் வெர்சஸ் வைல்ட்

ரோஹித்தின் இரண்டு சிக்ஸர்களை நம்பவே முடியவில்லை: பிரபல நடிகர் டுவீட்

இன்று நடைபெற்ற இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணியின் எதிர்பாராத வெற்றி குறித்து பிரபல நடிகர் தனது டுவிட்டரில் டுவீட் செய்துள்ளார்.