அடுத்த பிறந்தநாளை கோட்டையில் கொண்டாடுவோம்: கமல்ஹாசன்

  • IndiaGlitz, [Monday,November 09 2020]

உலக நாயகன் கமல்ஹாசனின் பிறந்த நாள் நேற்று முன் கொண்டாடப்பட்ட நிலையில் அவருக்கு ரசிகர்கள், கட்சி தொண்டர்கள், அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், பிக்பாஸ் போட்டியாளர்கள் என பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்தனர். சனிக்கிழமை நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியே கமல்ஹாசனின் பிறந்த நாள் நிகழ்ச்சி போலவே இருந்தது.

இந்த நிலையில் தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி கூறிய கமல்ஹாசன், தனது டுவிட்டரில் ‘அடுத்த பிறந்தநாளைக் கோட்டையில் கொண்டாடுவோம்’ என்று கூறியுள்ளார். கமல்ஹாசனும் அவருடைய கட்சியும் வரும் தேர்தலில் போட்டியிட உள்ள நிலையில் அவர் இந்த டுவிட்டை பதிவு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் அந்த டுவிட்டில் கூறியிருப்பதாவது:

என்னுடைய பிறந்தநாளுக்கு நேரிலும், தொலைபேசி மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாகவும் வாழ்த்திய ரசிகர்கள், நண்பர்கள், அரசியல் தலைவர்கள், திரையுலகினர், பிற துறை ஆளுமைகள், ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். என் பிறந்த நாளை 'நற்பணி' தினமாகக் கொண்டாடிய எங்கள் மக்கள் நீதி மய்யத்தின் சகோதரர்களை மனதாரத் தழுவிக்கொள்கிறேன். உங்கள் அன்பிற்கு மென்மேலும் தகுதியுடையவனாக என்னை ஆக்கிக்கொள்ள 'உள்ளும் புறமும்' சீரமைப்பேன். அடுத்த பிறந்தநாளை கோட்டையில் கொண்டாடுவோம்’ என்று கமல்ஹாசன் பதிவு செய்துள்ளார்.
 

More News

'மாநாடு' படத்தின் சூப்பர் சீக்ரெட்டை வெளியிட்ட சிம்பு!

சிம்பு நடிப்பில் சுசீந்திரன் இயக்கிய 'ஈஸ்வரன்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும், இந்த படத்தின் டப்பிங் பணியையும் சிம்பு முடித்துவிட்டார் என்ற செய்தியையும் ஏற்கனவே பார்த்தோம்

7 பேரின் விடுதலை தொடர்பாக இரட்டை வேடம் போடும் திமுக… அம்பலப்படுத்திய அதிமுக தரப்பு!!!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளன்

கைதுசெய்யப்பட்ட கம்பியூட்டர் பாபா… நில ஆக்கிரமிப்பில் ஈடுபட்டதாகப் பரபரப்பு!!!

மத்தியப்பிரதேசத்தில் கம்பியூட்டர் பாபா எனப்படும் நாம்தேவ் தியாகி எனும் சாமியார் மிகவும் பிரபலமான மனிதராக இருந்து வருகிறார்.

கீரிகள் மூலம் மனிதர்களுக்கு கொரோனா பரவுகிறதா??? தடுப்பூசி கண்டுபிடிப்பில் அடுத்த சிக்கல்!!!

முன்னதாக மனிதர்களைத் தவிர சில விலங்குகளுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தி இருந்தனர்.

விஷ்ணு விஷால் தந்தை மீதான வழக்கு: சூரியின் திடீர் கோரிக்கை!

நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை சூரியிடம் ரூபாய் 2.70 கோடி ரூபாய் மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்த நிலையில் தற்போது திடீரென சூரியின் தரப்பில் கோரிக்கை ஒன்று