நாங்கள் உங்களுடன் இருக்கின்றோம் விஜய்சேதுபதி: குஷ்பு டுவீட்!

  • IndiaGlitz, [Wednesday,October 21 2020]

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்திலிருந்து சமீபத்தில் விஜய் சேதுபதி விலகி விட்டாலும் அது குறித்த செய்திகள் இன்னும் ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் வெளியாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் விஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து கண்டனம் தெரிவித்து பல்வேறு திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

அந்த வகையில் தற்போது சமீபத்தில் பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பு, ’விஜய் சேதுபதி உங்களுக்கு ஆதரவாக நாங்கள் இருக்கின்றோம்’ என்று டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த டுவிட்டில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

விஜய் சேதுபதி அவர்களே, நீங்கள் ஒரு வலிமையான நபர். நீங்கள் இப்போது இருப்பது போலவே இருங்கள். உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல் வந்திருப்பது காட்டுமிராண்டித்தனமானது. கண்டிப்பாக இதுகுறித்து விசாரிக்கப்பட வேண்டும். குற்றவாளியைக் கண்டுபிடித்து கடுமையாக தண்டிக்க வேண்டும். நீங்கள் செய்ததைச் செய்ய ஒரு பெரிய மனசு வேண்டும். நாங்கள் உங்களுடன் ஒற்றுமையுடன் நிற்கிறோம்’ என கூறியுள்ளார்.

More News

சீரியல் நடிகையுடன் நிச்சயம், வேறொரு பெண்ணுடன் திருமணம்: ஆர்கே சுரேஷ் டுவிட்டால் பரபரப்பு

தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலாவின் 'தாரை தப்பட்டை' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி அதன் பின்னர் பல திரைப்படங்களில் ஹீரோ மற்றும் வில்லன் கேரக்டர்களில் நடித்து வருபவர் ஆர்கே சுரேஷ்.

தமிழ் உணர்வு என்று வசனம் பேசினால் மட்டும் போதாது: விஜய்சேதுபதி விவகாரம் குறித்து பிரபல நடிகர்

முத்தையா முரளிதரன் வாழ்கை வரலாறு திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளிவந்தவுடன் அவருக்கு திரை உலகம் மற்றும் அரசியல் உலகில் இருந்து எதிர்ப்புகள் குவிந்தன

ஐபிஎல் திருவிழா அட, சென்னைக்கு இன்னும்கூட ப்ளே ஆஃப் சான்ஸ் இருக்கா!

இந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அதள பாதாளத்தில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ப்ளே ஆஃப் சுற்று என்பது ப்யூஸ் போன பல்பூ ஒளிரும் ...

இந்த விளையாட்ட விளையாடுறதுக்கு வேற எதாவது செய்யலாம்: பிக்பாஸ் ஆரி ஆவேசம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று ஒரு பிரிவினர் அரக்கர்களாகவும் இன்னொரு பிரிவினர் ராஜ வம்சத்தினர்களாகவும் மாறி நடத்திய டாஸ்க்கில், புரமோவில் இருந்த விறுவிறுப்பு,

போதை பொருள் விவகாரம்: பிக்பாஸ் போட்டியாளர் உள்பட 2 நடிகைகள் கைது!

போதைப்பொருள் விவகாரத்தில் ஏற்கனவே ஒரு சில நடிகைகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது சின்னத்திரை நடிகை ஒருவரும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும்