படப்பிடிப்பில் காயமடைந்த ஸ்ருதிஹாசன் நாயகன்

  • IndiaGlitz, [Friday,August 14 2015]

பாலிவுட் திரையுலக கலைஞர்களுக்கு இது ஒரு இக்கட்டான காலம் போல தெரிகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் 'பிகே' இயக்குனர் மோட்டார் சைக்கிள் விபத்து ஒன்றில் சிக்கி காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் தற்போது பிரபல நடிகர் ஜான் ஆபிரஹாமுக்கு படப்பிடிப்பின்போது தலையில் பலத்த காயம் அடைந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

நடிகர் ஜான் ஆபிரஹாம் தற்போது வெல்கம் பேக்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஒரு சண்டைக்காட்சியின் படப்பிடிப்பு சமீபத்தில் நடைபெற்றபோது, காட்சிப்படி ஸ்டண்ட் கலைஞர் ஒருவர் ஜான் ஆபிரஹாமின் தோளில் அடிப்பதற்கு பதிலாக தலையில் மாற்றி அடித்துவிட்டார். இதனால் ஜான் ஆபிரஹாம் தலையில் காயம் ஏற்பட்டதாகவும், உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் ஜான் ஆபிரஹாமின் தலையின் உள்பகுதியில் எவ்வித பாதிப்பும் இல்லை என்றும், ஒருசில நாட்கள் சிகிச்சை பெற்றால் குணமாகும் அளவுக்கு சிறிய காயம்தான் ஏற்பட்டுள்ளது என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஜான் ஆபிரஹாம் நடித்து வரும் 'வெல்கம் பேக்' படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் நானா படேகர், அனில் கபூர், நஸ்ருதீன்ஷா உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தை அனிஸ் பாஸ்மி என்பவர் இயக்கி வருகிறார்.

More News

'வாலு' விநியோகிஸ்தர்களை உற்சாகப்படுத்திய செய்தி

பல்வேறு தடைகளை தாண்டி இன்று சிம்பு நடித்த 'வாலு' திரைப்படம் ரிலீஸ் ஆகவுள்ளது. இதனால் சிம்பு உள்பட படக்குழுவினர் அனைவரும் உற்சாகத்தின் இல்லையில் ...

பதவி உயர்வு பெற்றுள்ளேன். தாயான பிறகு சினேகாவின் முதல் டுவீட்

நடிகை சினேகாவுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது என்பதை அவருடைய கணவரும் பிரபல நடிகர் பிரசன்னா அறித்திருந்தார் என்பதையும் நாம் ஏற்கனவே...

தல 56' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பின் தேதி

அஜீத் நடித்து வரும் 'தல 56' படத்தின் சென்னை, வெளிநாடு மற்றும் கொல்கத்தா என மூன்று கட்ட படப்பிடிப்புகள் ஏற்கனவே முடிவடைந்த நிலையில்...

'வாலு' திரைவிமர்சனம்

தமிழ் திரையுலகில் இதுவரை எந்த படமும் சந்திக்காத அளவுக்கு பல சோதனைகளை தாண்டி மூன்று வருடங்களுக்கு பின்னர் வெளிவந்துள்ள சிம்பு படம்...

காசி தியேட்டரில் சிம்பு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சிம்பு, தனது சமூக வலைத்தளத்தில் 'நீங்கள் எந்த தியேட்டரில் 'வாலு' படத்தை பார்க்க விரும்புகின்றீர்கள் என்று தனது ரசிகர்களிடம் கேட்ட கேள்விக்கு பெரும்பாலான ரசிகர்கள் சென்னை 'காசி' தியேட்டர் என்று பதிலளித்தனர். .....