close
Choose your channels

கமல்ஹாசனை சந்தித்த பிரபல மே.இ.தீவுகள் கிரிக்கெட் வீரர்!

Wednesday, December 11, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் டி20 தொடரில் இந்தியாவும், 2-வது டி20 தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் அணியும் வெற்றி பெற்றுள்ள நிலையில் இன்று நடைபெறும் மூன்றாவது டி20 தொடரில் வெற்றி பெறும் அணி தொடரை வெல்லும் அணியாக அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணியின் முக்கிய பேட்ஸ்மேனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அணியின் வீரர்களில் ஒருவருமான பிராவோ இன்று, உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களை சந்தித்து உள்ளார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமாக நடைபெற்று உள்ளதாக தெரியவருகிறது. மேலும் இந்த சந்திப்பு குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது

ஏற்கனவே ஒரு சில தமிழ் படங்களில் சிறப்பு தோற்றங்களில் பிராவோ நடித்துள்ள நிலையில் தற்போது கமல்ஹாசன் நடித்து வரும் ’இந்தியன் 2’ படத்திலும் பிராவோ நடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.