திரையரங்குகளுக்கு என்னென்ன கட்டுப்பாடு: தமிழக அரசு அறிவிப்பு!

  • IndiaGlitz, [Tuesday,November 03 2020]

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக திரையரங்குகள் கடந்த ஏழு மாதங்களாக மூடப்பட்டிருந்த நிலையில் சமீபத்தில் நவம்பர் 10 ஆம் தேதி முதல் திரையரங்குகள் திறக்க தமிழக அரசு அனுமதித்துள்ளது. இந்த நிலையில் திரையரங்கில் பின்பற்றப்பட வேண்டிய கட்டுப்பாட்டு வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அவை பின்வருமாறு:

1. நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் திரையரங்குளை திறக்க அனுமதில்லை

2. திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படவேண்டும்.

3. திரையரங்கு வளாகத்தில் முக கவசம் அணிவது கட்டாயம்.

4. திரையரங்கு மற்றும் அதன் வெளிப்பகுதியில் நிற்கும் பார்வையாளர்கள் சமூக இடைவெளி 6 அடியாக இருக்க வேண்டும்.

5. திரையரங்கினுள் குளிர்சாதன வசதி இருந்தால் அதன் வெப்பநிலை 24 டிகிரியிலிருந்து 30 டிகிரியாக இருக்க வேண்டும்

மேற்கண்ட வழிமுறைகளை கட்டாயம் திரையரங்குகள் கடைபிடிக்க வேண்டும் என்றும், பார்வையாளர்கள் திரையரங்க நிர்வாகிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது
 

More News

பாஜகவில் இணைந்தார் விஜய்சேதுபதி பட தயாரிப்பாளர்!

அஜித் நடித்த 'விஸ்வாசம்' உள்பட ஒரு சில திரைப்படங்களின் தமிழக ரிலீஸ் உரிமையை பெற்ற நிறுவனம் கேஜேஆர் ஸ்டுடியோ என்பது தெரிந்ததே.

வருத்தப்பட்ட ரியோவின் மனைவி: வைரலாகும் டுவீட்

சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களுக்கு தாங்கள் மிஸ் செய்யும் நபர்கள் குறித்து பகிர்ந்து கொள்ளும் ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது.

ஆரி, அர்ச்சனா உள்பட 7 பேர் நாமினேஷனில்: யாரை யார் யார் நாமினேட் செய்தது?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று நடைபெற்ற நாமினேஷன் படலத்தில் ஆரி, அர்ச்சனா உள்பட 7 பேர் நாமினேஷன் செய்யப்பட்டனர்.

சொன்னபடியே கெத்தா ஜெயிக்க வச்சிட்டார் பாலாஜி! அர்ச்சனா குரூப் அப்செட்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய இரண்டாவது புரமோ விடியோவில் தோல்வி அடைந்து கொண்டிருப்பவர்களுக்கு ஆதரவு கொடுத்து வெற்றி பெற வைப்பது தான் கெத்து என்று பாலாஜி கூறியது குறித்து பார்த்தோம். 

'வலிமை' படப்பிடிப்பு: எச்.வினோத்திடம் ஏற்பட்ட திடீர் மாற்றம்!

அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் 'வலிமை' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஐதராபாத்தில் தொடங்கியது என்பதும் இந்த படப்பிடிப்பில் அஜீத் உள்பட படக்குழுவினர் அனைவரும்