ஹேமலதா கையாடல் செய்த பணத்தை என்ன செய்தார்?


Send us your feedback to audioarticles@vaarta.com


வசதிபடைத்த மலையாளியான ஜெயப்பிரகாஷ், மனைவி ஹேமலதா மற்றும் இரு குழந்தைகளுடன் லண்டன் பர்மிங்காமில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்தவாரம் விடுமுறைக்காக ஜெயப்பிரகாஷின் குடும்பம் கேரளாவுக்கு வரத்திட்டமிட்டு பயண ஏற்பாடுகளை செய்திருந்தது.
பயணத்திற்கு முன்தினம் ஹேமலதா தான் புதிதாக வேலைக்கு சேரவிருக்கும் அலுவலகத்தை பார்த்து விட்டு வருவதாக தனது ரேஞ்ச் ரோவர் காரை எடுத்துக் கொண்டு கிளம்பிச் சென்றிருக்கிறார். இரவான பின்னரும் ஹேமலதா வீடு திரும்பாததால் அவர் விபத்தில் ஏதும் சிக்கியிருப்பாரோ என்று பதட்டமடைந்த அவரது கணவர் ஜெயபிரகாஷ் மனைவியை தேட ஆரம்பித்திருக்கிறார்.
இந்த தருணத்தில் ஹேமலதா இதற்கு முன் வேலை பார்த்த நார்த்வுட் எஸ்டேட் நிறுவனத்தின் அதிபர் நின் ரெஹால் வெளியிட்ட ஒரு முகநூல் பதிவு ஜெயப்பிரகாஷ் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
தன்னிடம் 12 ஆண்டுகளாக வேலை பார்த்த ஹேமலதா, நோயுற்ற தன் தாயோடு தான் மருத்துவ மனையில் இருந்த கால கட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட போலி பரிவர்த்தனைகளை மூலம் கம்பனி பணத்தில் 160000 பிரிட்டன் பவுண்ஸ்களை கையாடல் செய்து தன்னை ஏமாற்றி விட்டதாகவும். இன்று நீதிமன்ற விசாரணையில் தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்ட போதிலும் அவருக்கு சிறைத் தண்டனை கிடைத்திருப்பதாகவும் இதனால் தான் மிகவும் வேதனையடைந்திருப்பதாகவும் அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார் நின் ரெஹால்.
இந்த பதிவு ஹேமலதாவின் கணவர் ஜெயப்பிரகாஷை பல வழிகளிலும் அதிர்ச்சியடைய வைத்தது. மிகவும் வசதியான வாழ்க்கை, லண்டனில் 10 மில்லியன் பவுண்ட்ஸ் மதிப்புள்ள வீடு, இவையெல்லாம் இருந்தும் ஹேமலாதா ஏன் அலுவலக பணத்தை கையாடல் செய்தார் அந்த பணம் எங்கே போனது என்று விடை தெரியாத பல கேள்விகள் அவர் முன்னே விஸ்வரூபமெடுத்து நிற்கின்றன.
கையாடல் செய்த பணத்தை திருப்பி செலுத்திவிட்டால் நீதிமன்றம் தான்னை விடுதலை செய்து விடும் என்ற மூட நம்பிக்கையில் சற்று நேரத்தில் வந்து விடுகிறேன் என பொய் சொல்லிக் கொண்டு கோர்ட்டுக்கு வந்த ஹேமலதாவின் வேண்டுகோளை ஏற்க மறுத்த நீதிமன்றம் அவர்செய்த குற்றத்திற்காக அவருக்கு 27 மாத சிறைத் தண்டனையை வழங்கி அவரை சிறைக்கு அனுப்பியிருக்கிறது.
மோசடி குற்றச்சாட்டில் சிக்கிய ஹேமலதா தான் கையாடல் செய்த பணத்தை தன் குழந்தைகளின் கல்வி செலவுகளுக்காக செலவிட்டதாகவும் மீதி பணத்தில் இந்தியாவில் வெள்ளப் பெருக்கால் உடமைகளை இழந்த உறவினர்களுக்கு உதவிகள் செய்ததாகவும் வாக்குமூலம் கொடுத்திருந்தாலும் அவற்றில் எதுவும் உண்மையில்லை என்கிறார் ஜெயப்பிரகாஷ்.
எதற்காக ஹேமலதா நம்பிக்கையான நிறுவனத்தில் தன் கைவரிசையைக் காட்டினார்? கையாடல் செய்த பணம் எங்கே போனது போன்ற கேள்விகளுக்கான விடை இப்போதைக்கு ஹேமலதாவிடம் மட்டுமே இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Rhea Dhanya
Contact at support@indiaglitz.com