close
Choose your channels

நீ என்ன வேண்டாம்னு சொல்றது... அமெரிக்காவை விட்டுவிட்டு அடுத்த நாட்டுக்குத் தாவும் இந்தியர்கள்!!!

Monday, June 29, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நீ என்ன வேண்டாம்னு சொல்றது... அமெரிக்காவை விட்டுவிட்டு அடுத்த நாட்டுக்குத் தாவும் இந்தியர்கள்!!!

 

அமெரிக்காவின் தொழில்நுட்ப வேலைகளுக்கு வழங்கப்படும் H-1B, H-2B விசாக்களில் அதிகக் கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துள்ளார் அந்நாட்டின் அதிபர் டொனால்ட் ட்ரம்ப். அதன்படி இந்த ஆண்டு இறுதிவரை வெளிநாட்டைச் சேர்ந்த யாருக்கும் இந்த பிரிவில் விசாக்கள் வழங்கப்படாது என்ற அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இதன் மூலம் சொந்த மக்களுக்கு இந்த வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும் என்ற நம்பிக்கையையும் அவர் தெரிவித்து இருக்கிறார். ஆனால் அமெரிக்காவில் கொட்டிக் கிடக்கும் தொழில்நுட்ப வேலைகள் சார்ந்த பிரிவிற்கு அதிகளவில் இந்தியா மற்றும் சீனாவை சேர்ந்த இளைஞர்களே அதிகளவில் விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில் ஒரேடியாக வெளிநாட்டினருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்காதபடி அதிபர் ட்ரம்ப் வெளியிட்டு உள்ள முடிவால் பல நாடுகளைச் சேர்ந்த இளைஞர்கள் அதிர்ந்து போயுள்ளனர்.

ஏற்கனவே அங்கு வேலைப் பார்க்கும் இளைஞர்களும் தங்களது விசாக்களைப் புதுப்பித்துக் கொள்ள முடியாதபடி அமெரிக்க அரசு கெடுபிடி காட்டி வருகிறது. தறபோது அமெரிக்காவை விட்டுவிட்டு பல இளைஞர்கள் கனடா பக்கம் தங்களது கவனத்தைத் திருப்பியுள்ளனர். அமெரிக்காவை அடுத்து கனடாவிலும் நெட்ஃபிளிக்ஸ், பேஸ்புக், ஆர்பபெட் போன்ற நிறுவனங்கள் தங்களது கிளைகளை நிறுவியிருப்பதும் இதற்கு ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. அதிபர் ட்ரம்ப் பதவி ஏற்றுக் கொண்டதில் இருந்தே வெளிநாட்டில் இருந்து வேலை வாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்கப்படும் விசாக்களுக்கு அதிக கெடுபிடி காட்டப்படுகிறது. அதனால் கடந்த 2017 ஆம் ஆண்டு கனட அரசு Fast Track Visa என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்து இருந்தது.

இத்திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்புகளுக்கு விண்ணப்பம் செய்தால் வெறுமனே 2 வாரங்களில் விசாக்களுக்கான விசாரணை முடிந்து வேலை வாய்ப்பு உறுதி செய்யப்படும். தற்போது கனடாவின் திட்டத்தை இந்தியாவைச் சேர்ந்த பல இளைஞர்கள் பயன்படுத்தி வருகின்றனர். 2020 ஜனவரி முதல் மார்ச் வரை 2300 பேர் டாப் 5 தொழில்நுட்ப வேலைகளுக்கு விண்ணப்பம் செய்துள்ளதாக அந்நாட்டின் விசா வழங்கும் அமைப்பு IRCC தெரிவித்து இருக்கிறது. தற்போது கொரோனா நோய்த்தொற்று கனடாவிலும் தொடர்ந்து அதிகரித்து வருவதால் மார்ச் மாதத்தில் இருந்து விசா பற்றிய நடவடிக்கைகள் குறைந்து காணப்படுவதாகவும் அந்த அமைப்பு தகவல் அளித்து உள்ளது.

கடந்த 3 வருடங்களுக்கு கனடாவின் Fast Track Visa திட்டத்தில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பத்த இந்தியர்களின் எண்ணிக்கை 62.1% ஆக இருந்துள்ளது. இதனால் இந்தியர்களே முதல் இடத்தைப் பிடித்து உள்ளனர். அடுத்த படியாக சீனா இருக்கிறது. கடந்த 3 ஆண்டுகளில் 1000 க்கும் மேற்பட்ட அமெரிக்கர்களும் இத்திட்டத்தின்கீழ் விசா பெற விண்ணப்பித்து இருப்பதாக IRCC தகவல் தெரிவித்து உள்ளது. கனடா அறிவித்து உள்ள புதிய விசா திட்டத்தில் விண்ணப்பம் செய்வோர் எண்ணிக்கை கடந்த 3 ஆண்டுகளில் 5 மடங்கு அளவிற்கு அதிகரித்து இருப்பதாகவும் அந்த அமைப்பு கூறுகிறது. தற்போது அமெரிக்கா கைவிரித்த வேலை வாய்ப்புகளை கனடாவில் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில் இந்திய இளைஞர்கள் கனடா பக்கம் கவனத்தைத் திருப்ப ஆரம்பித்து உள்ளனர். இந்தியா மற்றும் சீன இளைஞர்கள் எடுத்துள்ள இந்த அதிரடி முடியால் கனட அரசே ஆச்சயர்த்தில் மூழ்கியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.