ஸ்டாலினுக்கு என்ன தகுதி உள்ளது....! சீமான் சரமாரி கேள்வி...!

கருணாநிதியின் மகன் என்ற தகுதியைத் தவிர, ஸ்டாலினுக்கு வேறு தகுதியில்லை என்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கூறியுள்ளார்.

அதிமுக-பாஜக-பாமக கூட்டணி, திமுக காங்கிரஸ் கூட்டணி, மநீம- சமத்துவ மக்கள் கட்சி, தினகரனின் அமமுக போன்ற கட்சிகள் கூட்டணியுடன் இத்தேர்தலில் களமிறங்க உள்ளது. இந்த நிலையில் சீமானின் கட்சி தனித்தே போட்டியிடுகிறது. 234 தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் 117 சீட்டுக்களை மகளிர் வேட்பாளர்களுக்கு வழங்கியுள்ளது. கலாய் பேச்சு, பாட்டு பாடுவது, மக்களுடன் எதார்த்தமாக பேசுவது போன்ற பிரச்சார செயல்களால் மக்களை வெகுவாக கவர்ந்து வருகிறார் சீமான். சமூகவலைத்தளங்களில் இவருக்கு ஆதரவு பெருகி வருகிறது என்றே சொல்லலாம்.


சென்னை வில்லிவாக்கம் தொகுதியில், நாதக சார்பாக ஸ்ரீதர் களமிறங்குகிறார். வேட்பாளரை ஆதரித்து, சீமான் இன்று மக்களிடம் வாக்குகள் சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது,

அதிமுக, திமுக கழகங்கள் ஆட்சியில் இருக்கும் வரை, தமிழகத்தில் நல்ல அரசியல் என ஒன்று பிறக்காது, பிறக்கவும் முடியாது என்று கூறினார். மேலும் பேசிய அவர் கருணாநிதியின் மகன் என்ற ஒரு தகுதியை தவிர, ஸ்டாலினுக்கு வேறு தகுதிகளே கிடையாது. பார்த்துப்படிக்கும் போது, நூறு தவறுகள் செய்யும் தலைவர் தான் ஸ்டாலின். போட்டுப் பாருங்க ஓட்ட அப்புறம் பாருங்க நாட்ட என்ற வசனத்தை கூறி, ஒரு முறை எங்களுக்கு வாய்ப்பளியுங்கள், தமிழ்நாட்டை உலகில் தலைசிறந்த நாடாக மாற்றிக்காட்டுவேன். விவசாயி சின்னத்திற்கு வாக்களித்து வெற்றிபெறச்செய்தீர்கள் என்றால், ஒரு புதிய தேசத்தை உருவாக்கலாம் என்றும் அவர் கூறினார். வில்லிவாக்கத்தில் நாதக சார்பாக களமிறங்கும் ஸ்ரீதர், சிறந்த செயல்பாட்டாளர், ஆகச்சிறந்த அறிஞர் என்றும் அவரைப் பற்றி புகழாரம் சூட்டினார். உங்கள் தொகுதியை சிறப்பாக மாற்ற,ஸ்ரீதருக்கு ஓட்டுப்போட்டு வெற்றிபெறச் செய்யுங்கள் என்று பிரச்சாரம் செய்தார்.
 

More News

ஐஸ்வர்யா ராஜேஷ் அடுத்த படத்தில் இணைந்த யோகிபாபு!

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ள அடுத்த திரைப்படத்தில் யோகி பாபு இணைந்துள்ள தகவல் தற்போது வெளிவந்துள்ளது 

இலவச சிலிண்டரில் பிரியாணி, இலவச கேபிளில் நாடகம்: நமீதா பிரச்சாரம்

அரசு தரும் இலவச சிலிண்டரில் பிரியாணி செய்து அரசு தரும் இலவச கேபிள் மூலம் தொலைக்காட்சியில் நாடகம் பார்க்கலாம் என நடிகை நமீதா தேர்தல் பிரசாரம் ஒன்றில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

நீ எங்க எல்லாருக்கும் செல்லப்பொண்ணு தான்: ஷிவாங்கிக்கு ஆறுதல் கூறிய பிரபலம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருமே பிரபலம் ஆகி விட்டனர் என்பது தெரிந்ததே.

கருணாநிதி ஆட்சி தருவேன்' என்று ஸ்டாலின் சொல்லாதது ஏன்? 

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலுக்காக அதிமுக, திமுக இரு கட்சியினரும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

தனுஷும் 'குக் வித் கோமாளி' போட்டியாளரும் ஒரே பள்ளியில் படித்தவர்களா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'குக் வித் கோமாளி' என்ற நிகழ்ச்சியை மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பது தெரிந்ததே. குக் வித் கோமாளி சீசன் 1ஐ விட சீசன் 2 மிகப் பெரிய அளவில் பிரபலமாகி விட்டது