என்னாது Big Boss-க்கு போனா Divorce ஆ ஆ ஆ ? - வெங்கடேஷ் பட்


Send us your feedback to audioarticles@vaarta.com


பிரபல சமையற் கலைஞரும், குக் வித் கோமாளியின் 1,2,3 & 4 சீஸனின் ஜட்ஜாக இருந்த வெங்கடேஷ் பட் Role Reversal என்ற பாணியில் குக் வித் கோமாளி புகழ் குரோஷியுடனாட நேர்காணலில் குரோஷி வெங்கடேஷ் பட்டாகவும், வெங்கடேஷ் பட் குரோஷியாகவும் இருந்து பதிலளித்த ஜாலியான பேட்டி
ஆகவே, வெங்கடேஷ் பட் கேள்விகளை குரோஷியின் கேள்விகளாகவும், குரோஷி பதிலை வெங்கடேஷ் பட் பதிலாகவும் நேயர்கள் உணர்ந்து, புரிந்து பேட்டியை Enjoy செய்யவும்.
குரோஷி ( வெங்கடேஷ் பட்டாக)
வாயை மூடிக்கிட்டு சும்மா இல்லமாக நீ ஏன் மணிமேகலை Vs ப்ரியங்கா சண்டைக்குள்ள போன ?
வெங்கடேஷ் பட் ( குரோஷியாக)
நான் ஸ்பாட் ல இருந்தேன். அன்று அங்கு என்ன நடந்தது என்று எனக்குத் தெரியும். அங்கு நடக்காத விஷயத்தை எல்லாம் விடியோவாக எல்லோரும் பதிவிடுகிறார்கள். ஆனால் , நடந்தது என்ன என்று எனக்கு தெரியும், நியாயம் எனக்கு தெரியும் அதானால் அது குறித்து வீடியோ பதிவிட்டேன்.
குரோஷி ( வெங்கடேஷ் பட்டாக) - பதில் அருமை ! நீங்க வெங்கடேஷ் பட் ஐ விட குரோஷியாக நல்லா பதில் சொல்றிங்க...
வெங்கடேஷ் பட் ( குரோஷியாக) - அதானப்பா உண்மை
குரோஷி ( வெங்கடேஷ் பட்டாக) - Stress Buster போகும் னு CWC வந்தா, ஏன்டா எங்க stress level ஏத்துறீங்க...
வெங்கடேஷ் பட் ( குரோஷியாக) - ஒரு குழுவுக்கும், மற்றொரு குழுவுக்கும் வித்தியாசம் இருக்கணும். நாங்க ஷோவ நல்லா கொடுத்தோம். எல்லாரும் பெயர் எடுத்தோம். என்னென்ன perfrom பண்ண முடியுமோ அதை பண்ணினோம். நீங்க கூட சொன்னீங்க இந்தியன் தாத்தா, Redin Kingsely யா போட்ட வேடங்கள் நல்லா இருந்ததுனு. நாங்க எங்க வேலையா நல்லா செஞ்சோம்.
குரோஷி ( வெங்கடேஷ் பட்டாக) - சார் ! என் ஆதார் கார்டை உங்க கிட்டு கொடுத்து அனுப்பிடலாம் போலருக்கே..... நானா சொல்லிருந்தாகூட இவ்ளோ பாசிட்டிவ் ரிப்ளை கொடுத்திருப்பனா தெரியலையே....
அடுத்த கேள்வி
என்னாலதா, இந்த CWC ரன் ஆகுது, ஒரு லட்சம் payment கொடுத்தாதாம் CWC செட் க்கு வருவன்னு சொன்னியாம்ல....
வெங்கடேஷ் பட் ( குரோஷியாக) - இன்னும் நடந்த எபிசோடுக்கு payment வரல.... நா ஏம்ப்பா அதெல்லாம் சொல்ல போறேன். மொத்தமாவே நான் 1 சீசன்க்கு வாங்கியது அவ்ளோதான். அது வரலைனுதான் சொன்னேன்.
குரோஷி ( வெங்கடேஷ் பட்டாக) - ஒரு நாள் CM ஆகும் வாய்ப்பு கிடைத்தால் என்ன செய்வாய் ?
வெங்கடேஷ் பட் ( குரோஷியாக) - ஒரு நாள் CM ஆகும் வாய்ப்பு கிடைத்தால் வேண்டாம் என்று சொல்லிவிடுவேன்
குரோஷி ( வெங்கடேஷ் பட்டாக) - ஏன் ? ஐந்து வருடமும் முழுசா வேணும் னு கேட்பிங்களா ?
இவ்வாறு இந்த பேட்டியில் இன்னும் கல கலவென இருவரும் ஒருவரை ஒருவர் கலாய்த்துக்கொண்டுள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


-
Mithra Anjali
Contact at support@indiaglitz.com
Comments