Download App

என்னாச்சு விஜிக்கு? இதுவும் ஒரு யுக்தியா?

பிக்பாஸ் வீட்டில் யுக்தி என்ற சொல் அடிக்கடி நடமாடி வருகிறது. ஏமாற்றுதல், பொய் சொல்லுதல், வேலை பார்க்காமல் டிமிக்கு கொடுத்தால், தனக்கு மட்டும் சலுகை வாங்கி கொள்தால் அனைத்திற்கும் யுக்தி என்ற வார்த்தையை கூறி போட்டியாளர்கள் தப்பித்து கொள்கின்றனர்.

இந்த நிலையில் சற்றுமுன் வெளியான புரமோவில் ஒரு டாஸ்க்கில் பிக்பாஸ் 2 மற்றும் பிக்பாஸ் 1 போட்டியாளர்கள் விளையாடி வரும்போது திடீரென விஜயலட்சுமி மயங்கி விழுகிறார். விஜிக்கு என்ன ஆச்சு என்று ஆளாளுக்கு பதறுகின்றனர். அவருக்கு முதலுதவி கொடுக்க முண்டியடித்து வருகின்றனர்.

பிக்பாஸ் 1 நிகழ்ச்சியின்போது திடீரென வயிற்று வலி என்று ஜூலி கூறியதுபோல் இதுவும் மக்களின் அனுதாபத்தை பெற நடத்தும் ஒரு நாடகமா? அல்லது விஜிக்கு உண்மையிலேயே அடிபட்டுவிட்டதா? என்பது இன்று இரவு நிகழ்ச்சியில் தெரியவரும்