close
Choose your channels

வைரஸ் என்றால் என்ன??? கொரோனா வைரஸ் எப்படி உடலில் நோய்த்தொற்றை ஏற்படுத்துகிறது???

Thursday, April 2, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வைரஸ்களால் தனியாக வாழவோ அல்லது வளர்ச்சி சிதை மாற்றங்களைச் செய்யவோ முடியாது. எப்பொழுதும் உடலில் உள்ள ஓம்புயிரி செல்களையே வைரஸ்கள் பயன்படுத்திக் கொள்கின்றன. விலங்கு மற்றும் மனிதனின் உடலில் உள்ள செல்கள் இந்த வைரஸ்களை ஆர்வமாக ஏற்றுக்கொள்வதும் இல்லை. ஆனால் உடலில் உள்ள செல்கள் தனது சுழற்சிக்காகக் கழிவுகளை வெளியேற்றவும் புதிய செல்களை உற்பத்தி செய்யவும் தொடர்ந்து சுருங்கி, விரிவும் போது அந்த தருணத்தைப் பயன்படுத்திக் கொண்டு வைரஸ் தொற்றுகள் உடலில் எளிமையாகப் புகுந்து விடுகிறது.

வைரஸின் அளவு

நமது உடலில் உள்ள செல்கள் இரத்தத்தின் குணாம்சம்கொண்ட ஒரு சிறு உயிர்த்துளி என்றே பொதுவாகக் கூறப்படுகிறது (Cell, RBC). செல்லின் அளவு ஒரு மில்லி மீட்டரில் நூறில் ஒரு மடங்குதான். அதில் பத்தில் ஒரு மடங்காக பாக்டீரியா இருக்கிறது. அந்த பத்திலும் ஒரு மடங்காக கொரோனா போன்ற வைரஸின் அளவு இருக்கிறது. ஆனால் இந்த ரைவஸ்க்கு எந்த மரியாதையும் கிடையாது என்பதுதான் இங்கு முக்கியம். செல்லுக்கு வெளியே தேவையில்லாத ஒரு பொருளாக இருக்கும் இந்த வைரஸ் செல்லின் புரதத்தைப் பயன்படத்தி உள்ளே நுழைந்து பாதிப்பை ஏற்படுத்திவிடும் குணாம்சம் கொண்டது.

செல்கள் பொதுவாக இயங்குவதற்குத் தேவையான புரதப் பொருள்கள் மற்றும் ஆக்சிஜன் போன்றவற்றை வெளியே இருந்து எடுத்துக் கொள்கிறது. அதே போல கழிவுகளை வெளியேற்றவும் செய்கிறது. இதற்காக ஒவ்வொரு செல்லிலும் கதவு போன்ற ஒரு அமைப்பு இருக்கும். தேவை ஏற்படும்போது இந்தக் கதவு திறந்து பின்பு மூடிக்கொள்ளும். செல்களுக்குத் தேவையான சரியான புரதப் பொருட்கள் கிடைக்கும்போது அவற்றை ஏற்பதற்கு கைப்பிடி போன்ற ஏற்பிகளும் இருக்கும். புரதங்களின் வடிவில் ஒரு பகுதி சாவி போன்றே இருக்கும். நல்ல புரதங்கள் இந்த கதவுக்குள் நுழையும் போது சாவி போன்ற அமைப்பினால் எளிதாக உள்ளே நுழைந்து அதன் இயக்கத்தை தொடங்கும். இந்த கதவு, சாவி, கைப்பிடி அமைப்பில் ஒரு கள்ளச்சாவி தான் வைரஸ் கிருமி.

கள்ளச்சாவி

எப்படி புரதங்கள் சாவி போன்ற அமைப்பை வைத்திருக்கிறதோ அதோபோல இந்த வைரஸ்களும் கள்ளச்சாவி போன்ற RBD புரதம் மற்றும் செல்சுவரின் கதவைத் திறக்கும் சாவி அமைப்பை கொண்டிருக்கின்றன. செல்களில் நடக்கும் இயல்பான நடவடிக்கைகளில் இந்தக் கள்ளச்சாவி போட்டு உள்ளே நுழைந்து விடுகிறது கொரோனா போன்ற வைரஸ்.

ஆனால் எல்லா வைரஸ்களும் எல்லா கதவுகளுக்குள்ளும் (ஓம்புயிரி செல்கள்)  நுழைய முடியாது. எனவே தான் விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் பல வைரஸ்கள் மனிதர்களை தாக்குவதில்லை. மனிதச் செல்களில் (ஓம்புயிரி செல்கள்)  கள்ளச்சாவி போட்டு (RBD புரதம் போன்ற கதவைத் திறக்கும் சாவி) நுழைந்து விடும் வைரஸ்கள் மட்டுமே மக்களுக்கு நோய் தொற்றை வரவழைக்கிறது.

தற்போது கொரோனா வைரஸிடம் மனிதன் மற்றும் விலங்குகளில் உள்ள செல்களில் புரதத்தை பற்றிக்கொள்ளும் கள்ளச்சாவி இருக்கிறது. அந்தக் கள்ளச்சாவி தான் CoV-2 ஆகும். கொரோனா வைரஸிடம் உள்ள கள்ளச்சாவி அதாவது அதன் வடிவம் ஒரு மென்மையான பூப்பந்துபோலவும் அதைச்சுற்றி சூரியக் கதிர்கள் போல முட்கள் இருக்கின்றன. இந்த முட்கள் அதாவது புரதத்தைக் கொண்டு நமது செல்லுக்குள் உள்ளே நுழைந்து விடுகிறது. நுழைந்த வைரஸ்கள் ஒவ்வொரு செல்லாக அனைத்து செல்லிலும் பரவி உடலில் பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது.

கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு விட்டால் அதற்கு சிகிச்சை அளிக்கும்போது செல்களை பலிமிழக்கச் செய்யும் கொரோனா வைரஸை அழிக்க மட்டும்தான் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். செல்கள் பலமிழந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய அவசியமும் இதில் அடங்கியிருக்கிறது. கொரோனா வைரஸ் நேரடியாக சுகாவ உறுப்புகளைத் தாக்கி அழிக்கும் தன்மைக்கொண்டிருப்பதால் தற்போது உலகம் முழுவதும் வென்டிலேட்டர்களின் தேவை அதிகரித்து இருக்கிறது.

சாதாரணமாக மனித உடல் சுவாசிக்கும் தன்மை இழந்துவிட்டால் மட்டுமே மருத்துவமனைகளில் வென்டிலேட்டர்களை பயன்படுத்துவார்கள். ஆனால் கொரோனா நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானோருக்கு சுவாசக் கருவி தேவைப்படுகிறது. நேரடியாக சுவாசத்தை நிறுத்திவிடும் அபாயம் இருப்பதால்தான் கொரோனாவை பார்த்து உலகநாடுகளே அஞ்சுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

வைரஸ் என்றால் என்ன??? கொரோனா வைரஸ் எப்படி உடலில் நோய்த்தொற்றை ஏற்படுத்துகிறது???

மேலும், நோய் எதிர்ப்பு மண்டலங்கள் உறுதியாக இருக்கும்போது கொரோனா வைரஸ் தாக்காது எனப் பொதுவாகச் சொல்லப்பட்டாலும் இது ஆய்வில் இன்னும் தெளிவுப்படுத்தப்படவில்லை. இளைஞர்கள் கொரோனா வைரஸால் மாட்டிக்கொள்ளும்போது அவர்களது சுவாச உறுப்புகள் உறுதியாக இருக்கும்பட்சத்தில் பிழைத்துக்கொள்ள முடியும். குழந்தைகள், பெரியவர்கள் இந்த வைரஸால் தாக்கப்படும்போது கடுமையான பாதிப்புகள் ஏற்படுகின்றன. எனவே கொரோனாவில் இருந்து தப்பிக்க கூடுமான வரை சமூக விலகலை கடைப்பிடிப்பதே சிறந்த வழிமுறையாக இருக்கிறது. 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.