கொரோனா 3 ஆம் கட்டம் என்றால் என்ன??? இந்தியாவின் நிலைமை???

  • IndiaGlitz, [Monday,March 30 2020]

 

இந்தியாவில் கொரோனா பாதிப்பு இரண்டாம் கட்டத்தை எட்டியிருக்கிறது. இது அடுத்தக் கட்டத்தைத் தொடக்கூடாது என்பதில் இந்திய அரசு கவனமாக இருப்பதாக செய்தி ஊடகங்களில் அடிக்கடிச் சொல்லப்படுகிறது. அது என்ன 3 ஆம் கட்டம் என்பதைக் குறித்த சிறுவிளக்கம்.

முதற்கட்டம் (Imported stage )

கொரோனா வைரஸ் அதிகமாக பாதித்த நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு திரும்பியவர்கள் தங்களுக்குக் கொரோனா பாதிப்பு இருப்பது தெரியாமலே தாயகம் திரும்பி விடுகின்றனர். இந்நிலையில் விமானநிலையத்தில் சோதனை மேற்கொள்ளப்படுகிறது. அவர்களுக்கு விமான நிலையங்களில் சோதனை மூலம் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்படுகிறது. இந்தியாவுக்கு சுற்றுலா வந்தவர்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு பணிகளுக்காக சென்றவர்கள் என விமான நிலைய சோதனைகளில் கண்டறியப்படுவது முதற்கட்டம்.

இரண்டாவது கட்டம் உள்ளூர் பரவல் (Local transmission from infected)

வெளிநாட்டவர் அல்லது வெளிளநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் தங்களது குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்களுடன் தொடர்பு கொள்வதால் அவர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு விடுகிறது. வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளாமல் இருப்பதன் மூலம் இந்தப் பாதிப்பு ஏற்படுகிறது. இதுவரை இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்கள் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களுடன் நேரடி தொடர்பில் இருப்பவர்கள் மட்டுமே என்பதும் குறிப்பிடத் தக்கது. இந்தியா தற்போது 2 ஆம் கட்டத்தில் இருக்கிறது.

மூன்றாவது கட்டம் (Community transmission)

கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது நிலைமைக் குறித்து தெரியாமல் பல இடங்களுக்கும் செல்வதால் வரும் பாதிப்பு 3 ஆவது கட்டமாக பார்க்கப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளாமல் பல இடங்களுக்கும் செல்வதால் நோய்தொற்று அடுத்த மனிதர்களிடம் பரவ ஆரம்பிக்கும். வணிக நிறுவனம், கேளிக்கை நிகழ்ச்சிகள், வழிபாட்டுத் தலங்கள் போன்ற இடங்களுக்குச் செல்வதால் வைரஸ் கிருமி மற்ற மனிதர்களுக்கும் பரவிவிடுகிறது.

பாலிவுட் பாடகி கனிகா கபூர் தனக்கு நோய்த்தொற்று இருப்பது தெரியாமல் பா.ஜ.க. முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்ட கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். இதனால் பலருக்கும் நோய்த்தொற்று இருக்குமோ என்ற அச்சம் சுகாதாரத்துறையையே ஆட்டிப்படைத்து. இந்நிலைமைக்கு இந்தியா சென்று விட்டால் இத்தாலியைப் போன்று பலருக்கும் நோய்த்தொற்று ஏற்பட்டு கட்டுப்படுத்த முடியாத நிலைமை வரலாம்

நான்காவது கட்டம் (Epidemic)

எவர் மூலமாகப் பரவியது என அறியமுடியாத அளவிற்கு உள்நாட்டில் அதீத தன்மையுடன் வைரஸ் தொற்று பரவுவது நான்காவது கட்டம். உலகளாவிய நோய்த்தொற்று கொரோனாவை Pandemic என்றே குறிப்பிடுகின்றனர். இந்நோய்த் தொற்று இன்று இந்தியாவில் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களால் மட்டுமே ஏற்படுகிறது. அடுத்தக்கட்டமாக வரையறுக்கப்பட்ட அளவைத் தாண்டி அனைவருக்கும் பரவும் ஆபாயம் ஏற்பட்டால் அது Epidemic என அழைக்கப்படுகிறது.

குறிப்பிட்ட அளவைத் தாண்டி அதாவது வெளிநாட்டு பயணிகள் அல்லது அவர்களுடன் தொடர்புடையவர்களைத் தாண்டி மற்றவர்களுக்கும் பரவும் கொள்ளைநோய் என்பதையே Epidemic எனக் குறிப்பிடுகிறோம். ஒருவேளை இந்தியாவிற்கு இந்த நிலைமை ஏற்பட்டால் விளைவுகளை யோசித்துக்கூட பார்க்கமுடியாது என்பதும் குறிப்பிடத் தக்கது.

More News

சென்னையில் இருந்து வந்தவர்களுக்கு இலங்கை அரசு எச்சரிக்கை

உலகம் முழுவதும் பரவி ஏராளமான மனித உயிர்களை பலி வாங்கிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ், இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான இலங்கையிலும் தாக்கி உள்ளது.

பொருளாதாரத்தைச் சீர்செய்யவே முடியாது!!! மனமுடைந்த ஜெர்மன் நிதியமைச்சர் ரயில்முன் பாய்ந்து தற்கொலை!!!

கொரோனா பாதிப்பினால் உலகம் கடும் பொருளாதாரப் பாதிப்பைச் சந்தித்து வருகிறது. இந்நிலையில்

ரூ.750 கோடி கொரோனா தடுப்பு நிதி கொடுத்த பிரபல விளையாட்டு வீரர்

உலகப்புகழ் பெற்ற முன்னணி கால்பந்து வீரரான கிறிஸ்டியோனோ ரொனால்டோ கொரோனா வைரஸ் தடுப்பு நிதியாக இந்திய மதிப்பில் சுமார் 750 கோடி நிதியளித்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது

மருத்துவர்கள் பரிந்துரை சீட்டுடன் வந்தால் மது வழங்கப்படும்: முதல்வர் அறிவிப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள்

கொரோனாவால் பொருளாதார வீழ்ச்சி: தற்கொலை செய்து கொண்ட நிதியமைச்சர்

கொரோனா வைரஸ் உலகமெங்கும் மிக வேகமாக பரவி ஆயிரக்கணக்கான உயிர்களை பலியாக்கி வரும் நிலையில் இன்னொரு பக்கம் உலகின் அனைத்து நாடுகளின் பொருளாதாரத்தையும் வீழ்ச்சி அடையச் செய்துள்ளது